மே தினக் கூட்டத்தை நடத்த ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கு அதிகாரம் இல்லை -கபீர் ஹாசீம்

மே தினக் கூட்டத்தை நடத்த ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கு தார்மீக அதிகாரம் இல்லை என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம் இததனை தெரிவித்துள்ளார்.

10 வருட காலப்பகுதியினுள் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் தலைவர்கள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தவறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த மே தின கூட்டமானது உழைக்கும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் அமைய வேண்டும்.

அதனைவிடுத்து மே தினக்கூட்டங்களை நடத்த தகுதியற்றவர்கள் அது குறித்து கருத்து வெளியிட்டு பயனில்லை. 10 வருட காலமாக மக்களது தேவைகளை பூர்த்தி செய்ய தவறி ஒரு பகுதியினரை மாத்திரம் பாதுகாத்த ஒன்றிணைந்த எதிர்கட்சியின் தலைவர்களுக்கு மே தினக் கூட்டத்தை நடத்த தார்மீக அதிகாரம் இல்லை என்றும் அமைச்சர் கபீர் ஹாசீம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதே வேளை, கடன் சுமைகளை மக்கள் மீது சுமத்த நடவடிக்கை எடுக்க போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares