மேர்வின் சில்வாவின் மகன் மீதான தாக்குதல்! சீ.சீ.ரி.வி கமரா காட்சிகள் மீள பரிசோதனை

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த விசாரணை நடத்தும் நோக்கில் சீ.சீ.ரி.வி கமரா காட்சிகளை மீள
பரிசோதனையிடுமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

2013ம் ஆண்டு ஜூலை மாதம் 29ம் திகதி கொழும்பு ஒடெல் வாகனத் தரிப்பிடத்தில் வைத்து மாலக்க சில்வா மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்த தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ள சீ.சீ.ரி.வி கமராக காட்சிகளே மீளவும் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. இந்த வீடியோ காட்சிகளை மீளவும் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய நேற்று  கறுவாத்தோட்ட பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இராணுவச் சீருடையில் வந்த 12 பேர் மாலக்க மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இதேவேளை, இந்த தாக்குதலை மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தினரே மேற்கொண்டதாக, மஹிந்த தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் மேர்வின் சில்வா ஊடகங்களிடம்
தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares