Breaking
Sat. Dec 21st, 2024

முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்குள் உள்ளக முரண்­பா­டுகள் வலுப்­பெற்­றி­ருக்கும் நிலையில்அக்­கட்­சியின் தவி­சாளர் பஷீர் சேகு­தாவூத் கட்சி உயர்­பீட உறுப்பினர்களுக்கு விரிவான கடி­தமொன்றை அனுப்­பி­ வைத்­துள்ளார்.

அக்­க­டி­தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முழு விப­ரங்­க­ளையும் வாச­கர்­க­ளுக்­காக தருகிறோம். 

பிஸ்மில்­லாஹிர் ரஹ்­மானிர் ரஹீம். அனைத்து உச்­ச­பீட உறுப்­பி­னர்­க­ளுக்கும்
அஸ்­ஸ­லாமு அலைக்கும்!

நமது கட்­சியின் கடந்த 15 வருட கால வர­லாற்றை, இவ்­வ­ர­லாற்றின் வழி நெடு­கிலும் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்­பட இவ்­வுச்ச பீட உறுப்­பி­னர்­களில் அனே­க­ருடன் கைகோர்த்து நடந்து வந்­தவன் என்ற வகையில் நான் உட்­பட நம் அனை­வ­ருக்கும் இவ்­வ­ர­லாற்றுப் பதி­வு­களை மீள் நினை­வு­றுத்த கட­மைப்­பட்­டுள்ளேன்.

இனிமேல் நான் சொல்லும் ஒவ்­வொரு வாக்­கி­யத்­துக்கும் அல்­லாஹ்­வு­டைய கலா­மான புனித அல்­குர்­ஆனில் சத்­தியம் செய்­த­வ­னா­கவும் மௌத்தின் பின் அல்­லாஹ்­வு­டைய சந்­நி­தா­னத்­திலே, இவ்­வுண்­மை­களின் மீதான கேள்வி பதி­லுக்கு தயா­ரா­ன­வ­னா­கவும் உங்­க­ளுக்கு எழு­து­கிறேன்.

இம்­மு­த­லா­வது மடலை அண்­மை­யிலே நமது கட்­சியில் இடம்­பெற்ற செய­லாளர் நாயகம் சகோ­தரர் ஹஸ­னலி அவர்­க­ளது அதி­கா­ரங்கள் அநி­யா­ய­மா­கவும், கண்ணைப் பொத்தி மறைப்புச் செய்தும் பறிக்­கப்­பட்ட நிகழ்வில் இருந்து தொடங்­கு­கிறேன்.
தியா­கத்­த­லைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்­களின் மைய்யித் அடக்கம் செய்­வ­தற்கு முன்­பு­வரை, 2016 இல் இருந்து பின்­நோக்­கிய 2000 ஆம் ஆண்டு வரை­யான காலத்தில் நிகழ்ந்த அத்­தனை அற ­நி­கழ்­வு­க­ளையும், புற நிகழ்­வு­க­ளையும் உங்­க­ளிடம் ஒப்­பு­விக்க விரும்­பு­கிறேன்.

 செய­லாளர் நாயகம் பொறுப்பின் வேர் அறுப்பு 
பெருந்­த­லைவர் அஷ்ரப் அவர்­களின் வபாத்தின் பின் எழுந்த ஹக்கீம்–பேரியல் முரண்­பா­டு­களின் போது நான் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்­களின் பக்கம் தள­ப­தி­களில் ஒரு­வ­னாக நின்று எல்லா இடங்­க­ளிலும் தலை­வ­ரையும், கட்­சி­யையும் காப்­பாற்ற போரா­டினேன். ஏனெனில், என்னைப் பொறுத்­தவரை தலைவர் பக்கம் ”சரி” இருந்­தது.

அடுத்து ஏற்­பட்ட ஹக்கீம்–ஹாபிஸ் நஸீர் அஹமட் போட்­டியில் நஸீர் நூற்­றுக்கு நூறு வீதம் பிழை என்­பதை இனங்­கண்டு தலை­வரின் பக்கம் உயிர் கொடுக்க தயாராய் நின்றேன். தலைவர் ஹக்கீம் அவர்கள் ஒரு நாள் fபீல்ட் பொலிஸ் தலை­மை­யக மைதா­னத்தில் உடற்­ப­யிற்­சியில் ஈடு­பட்­டி­ருந்த போது மைதா­னத்­துக்குள் நுழைந்த ஹாபிஸ் நஸீர் தலை­வரைப் பார்த்து “உங்­களைத் தொலைக்­காமல் விட­மாட்டேன்” என்று சவால் விட்டார்.

இச்­சம்­பவம் நடந்த அன்று உடற்­ப­யிற்­சிக்­கான உடையைக் கூட மாற்­றாமல் தலைவர் என் வீட்­டுக்கு வந்து அச்­சத்தை வெளிக்­காட்­டி­ய­வ­ராக இதற்கு என்ன செய்­யலாம் என்று ஆலோ­சனை நிகழ்த்­தி­யது ஒன்­றரை தசாப்தம் கழிந்தும் என் நினைவில் பசு­ம­ரத்து ஆணி­போல பதிந்­துள்­ளது.

பின்னர் ஏற்­பட்ட ஹக்கீம்–அதா­வுல்லா பிரச்­சி­னையின் போது தலைவர் பக்கம் சரி கண்டு அவரைக் காப்­பாற்­றினால் தான் கட்­சியை காப்­பாற்ற முடியும் என்ற அடிப்­ப­டையில் தோள் கொடுத்து நின்றேன்.

தலைவர் ஹக்கீம்–ஹிஸ்­புல்லா போட்­டியில் முழு­வ­து­மாக தலைவர் ஹக்கீம் தரப்பே மிகச்­ச­ரி­யென இனம் கண்டு அவர் சார்­பாகப் போரா­டினேன். 2005 ஆம் ஆண்டு இடம் பெற்ற பிரி­வி­னைக்­கான கார­ணி­யாக இருந்த ஹக்கீம்–ரிஷாட்–அமீ­ரலி முரண்­பாட்டின் போதும் தலைவர் ஹக்கீம் அவர்­களே ‘சரி’ என முடி­வெ­டுத்து அவரின் பக்கம் கிட்­டத்­தட்ட ஒரு கவச வாகனம் போல் நின்று போரா­டினேன்.

இக்­கால கட்­டத்தில் இரண்டு முறை எனது உயிர் பாதிக்­கப்­பட இருந்த சந்­தர்ப்­பங்­களில் எனது இளமைக் காலங்­களில் நான் பெற்றுக் கொண்ட பயிற்சி­களின் அடிப்­ப­டையில் அல்­லாஹ்வின் உத­வியால் தப்­பித்தேன். இப்­ப­யங்­கர சம்­ப­வங்­களை பிறி­தொரு மடலில் விவ­ரிக்­கிறேன். கடந்த கட்­டாய உச்­ச­பீடக் கூட்டம் மற்றும் பேராளர் மாநாட்டின் பின்னர் ஹக்கீம்–ஹஸ­னலி முரண்­பாடு மெல்­லெனக் கிளம்­பி­யுள்­ளது. இம் முரண்­பாட்­டிலே செய­லாளர் நாயகம் ஹஸ­னலி பக்­கமே சரியும், நியா­யமும் இருப்­ப­தா­கவும், தலைவர் ஹக்கீம் அவர்­களின் பக்­கத்தில் சரி­யையோ, நியா­யத்­தையோ என்னால் காண முடி­ய­வில்லை என்­ப­தாலும் நான் ஹஸ­ன­லியின் சரி­யான பக்­கத்­துக்கு ஆத­ர­வாக நிற்­கிறேன்.

ஏன் இவ்­வாறு முடி­வெ­டுத்தேன்?
2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டு காலப் பகு­தியில் நமது கட்­சியில் இடம்­பெற்ற முரண்­பா­டு­களும், பிரி­வி­னை­களும் தலை­வ­ரிடம் பங்கு கேட்டு எழுந்­த­வை­க­ளாகும். ஆனால் இன்று எழுந்­துள்ள பிரச்­சினை கட்­சிக்குள் தலை­வ­ரிடம் செய­லாளர் நாயகம் ”நீதி கேட்­ப­தனால்” ஏற்­பட்ட ஒன்­றாகும் என்­ப­தனால் ஹஸ­னலி சார்ந்து நிற்­கின்றேன்.

இறு­தி­யாக இடம் பெற்ற கட்­டாய உச்­ச­பீடக் கூட்­டத்தில், உச்­ச­பீ­டத்­திற்கு செய­லாளர் ஒரு­வரை நிய­மிப்­பது என்றே தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது. கட்­சிக்­கான செய­லாளர் என்று அல்ல. பின்னர் அடுத்­தநாள் நடந்த பேராளர் மாநாட்டில் பெரும்­பான்­மை­யான பேரா­ளர்கள் ஆங்­கிலம் பற்­றிய போதிய அறிவு பெற்­றி­ராத போதும், யாப்­புத்­தி­ருத்தம் ஆங்­கி­லத்தில் வாசிக்­கப்­பட்­டது.

அதன்­போது புதி­தாக நிய­மிக்­கப்­படும் கட்­சிக்­கான செய­லாளர், உச்­ச­பீட செய­லா­ள­ரா­கவும் செயற்­ப­டுவார் என்றே வாசிக்­கப்­பட்­டது. ஆனால் தமிழில் இந்த விடயம் வாசிக்­கப்­பட்­ட­போது உயர்­பீட செய­லாளர் தலை­வரால் நிய­மிக்­கப்­ப­டுவார். தேவை ஏற்­பாட்டால் தலை­வரால் நீக்­கப்­ப­டுவார் என்றே சொல்­லப்­பட்­டது. இது நம் கௌரவ உச்­ச­பீட உறுப்­பி­னர்­க­ளையும், மதிப்­பிற்­கு­ரிய பேரா­ளர்­க­ளையும் சுத்­த­மாக ”ஏமாற்­றிய சத்­த­மான நாடகம்” என்­பதால் இத­னோடு உடன்­பட முடி­யாமல் ஹஸ­ன­லியின் நியாயம் கேட்கும் உச்­ச­பீட உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­னாக நானும் நிற்­கிறேன்.

* உச்­ச­பீ­டத்­துக்­கான செய­லா­ள­ருக்கு மாதச் சம்­பளம் வழங்­கப்­படும் என்று இந்த கட்­டாய உச்­ச­பீ­டத்தில் தலை­வரால் சொல்­லப்­பட்­டது. இவ் விடயம் இவ்­வுச்­ச­பீடக் கூட்­டக்­ குறிப்பில் இடம்­பெ­ற­வில்லை.

i. சம்­பளம் பெறும் செய­லாளர் கட்­சிக்கு உண்­மை­யாக இருக்­க­மாட்டார்.

ii. கட்­சியில் செய­லா­ள­ருக்கு சம்­பளம் வழங்­கு­வது பிழை­யான முன்­னு­தா­ர­ண­மாகும்.

iii. சம்­ப­ளத்­திற்கு வேலை செய்­பவர் அதிக சம்­பளம் தரும் வேறு ஒரு அர­சியல் கட்­சிக்கு பாயும் வாய்ப்­புண்டு.

iv. பணத்­துக்­காக கட்­சியின் இர­க­சி­யங்­களை கசிய விடும் ஆபத்தும் உண்டு.

v. கட்­டாய உச்­ச­பீடக் கூட்டக் குறிப்பு அடுத்து இடம்­பெற்ற புதிய உச்­ச­பீட கூட்டத்தில் வாசித்து திருத்­தப்­பட்­டதா என்­பதை நினை­வுப­டுத்திப் பார்க்­கு­மாறு தய­வுடன் எல்லா உறுப்­பி­னர்­க­ளையும் வேண்­டு­கிறேன்.

* கட்­டாய உச்­ச­பீ­டத்தில் எடுக்­கப்­ப­டாத ஒரு தீர்­மா­னத்தை தேர்தல் ஆணை­யா­ள­ருக்கு அனுப்பி வைத்­தமை, நமது கட்சின் உச்­ச­பீட உறுப்­பி­னர்­களை இய­லா­த­வர்­க­ளாக, அறி­வற்­ற­வர்­க­ளாக, அர­சியற் சூனி­யங்­க­ளாக, ஆமாம் சாமி­க­ளாக, ஏவ­லுக்கு அடி­ப­ணியும் எடு­பி­டி­க­ளாக, கூட்­டத்­தோடு சேர்ந்து கோவிந்தா போடு­ப­வர்­க­ளாக கருதிச் செயற்­பட்­ட­மையை மிகத் துல்­லி­ய­மாகக் காட்­டு­கின்­றது. எனவே எமது உச்­ச­பீட உறுப்­பி­னர்­க­ளு­டைய தன்­மா­னத்தின் அடை­யா­ள­மாக ஹஸ­ன­லியை இனம்­கண்டு நீதி கேட்டு அவர் பக்கம் சார்ந்து நிற்­கின்றேன்.

* ஹஸ­னலி கட்­சியின் ஸ்தாபக உறுப்­பினர். ஆதி முஸ்லிம் காங்­கி­ரஸ்­காரர். 30 ஆண்­டு­க­ளாக முஸ்லிம் காங்­கி­ரஸை விட்டுப் பிரி­யா­தவர். கட்­சிக்கு தீங்­கி­ழைக்­கா­தவர், இரண்டு தலை­வர்­க­ளுக்கும் தூணாக துணை நின்­றவர். கட்­சியின் எந்த உறுப்­பி­ன­ரோடும் குரலை உயர்த்திக் கூட பேசாத குணக்­குன்று. வேறு எவரும் செய்­தி­ராத, கட்சி தொடங்­கிய காலம் தொட்டு இன்­று­வ­ரை­யான ஆவ­ணங்­களை சேர்ப்­பதே தனது முதல் பணி என்று அத்­த­னை­யையும் சேக­ரித்து வைத்­தி­ருக்கும் நமது “ஆவண ஞானி”.

இப்­ப­டிப்­பட்­ட­வ­ருக்கு இந்த அநீதி என்றால் நாமெல்லாம் எம்­மாத்­திரம் என்று நினைத்த மாத்­தி­ரத்தில் நீதி கேட்­டு ஹஸ­ன­லி­யுடன் நிற்க முடி­வெ­டுத்தேன்.

* செய­லாளர் அர­சியல் ரீதி­யாக பத­விகள் வகிக்கக் கூடாது என்று தலைவர் ஹக்கீம் முன்­மொ­ழிந்தார். இது ஒரு கம்­ப­னியின் நிர்­வா­கி­களில் ஒருவர் வியா­பாரம் செய்­ய­கூ­டாது என்ற கூற்­றுக்கு ஒப்­பா­னது. அர­சியல் கட்­சியின் செய­லாளர் அர­சியல் பதவி வகிக்க கூடாது என்­பது அறம் இல்லை. ஐக்­கிய தேசிய கட்­சியின் செய­லாளர் கபீர் ஹாஷிம், ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் செய­லாளர் துமிந்த திசா­நா­யக்க, ஐக்­கிய மக்கள் கூட்­ட­மைப்பின் செய­லாளர் மஹிந்த அம­ர­வீர, தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் செய­லாளர் மாவை சேனா­தி­ராஜா போன்­ற­வர்­களும் இன்னும் பல கட்­சி­களின் செய­லா­ளர்­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளா­கவும், அமைச்­சர்­க­ளா­கவும், மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளா­கவும் உள்­ளனர். ஜே.வி.பி. யின் செய­லாளர் டில்வின் சில்வா மாத்­தி­ரமே அர­சியல் பதவி வகிக்­கா­த­வ­ராக உள்ளார். இது அந்தக் கட்­சியின் புரட்­சி­கர, இட­து­சாரி இயல்­புடன் ஒத்­து­வ­ரக்­கூ­டி­யது. நமது கட்சி ஜே.வி.பி. போன்ற கட்சி அல்ல என்­பது எமக்கு நன்­றாகத் தெரியும்.

எனவே முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் அர­சியல் பத­வி­களை வகிக்க முடியும் என்­பதில் நியாயம் கண்டேன். இதனால் ஹஸ­ன­லியின் கருத்­துக்­களைச் சரி கண்டேன்.

i. நமது இன்­றைய செய­லாளர் நாயகம் ஹஸ­ன­லிக்கு இன்­றைய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் இன்று செய்­தி­ருப்­பது போல அன்­றைய தலைவர் மர்ஹூம் அஷ்ரஃப் அவர்கள் அன்­றைய செய­லாளர் நாய­க­மாக இருந்த ரவூப் ஹக்கீம் அவர்­க­ளுக்கு அன்றே செய்­தி­ருந்தால், இன்று தலைவர் ரவூப் ஹக்கீம் எங்கே இருந்­தி­ருப்பார்? என்­ன­வா­கி­யி­ருப்பார் என்று சிந்­தித்தேன்.

ii. 1994 ஆம் ஆண்டில் செய­லாளர், அர­சியல் பதவி வகிக்க முடி­யாது என்று மர்ஹூம் அஷ்ரஃப் அவர்கள் சொல்­லி­யி­ருந்தால், ரவூப் ஹக்கீம் அவர்கள் தேசிய பட்­டி­யலில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராகி இருந்­தி­ருக்க முடி­யுமா? அப்­படி இருந்­தி­ருக்கா விட்டால் 2000 ஆம் ஆண்டு பெருந்­த­லைவர் அஷ்­ரஃப்பின் மர­ணத்­திற்கு பிறகு ஹக்கீம் தலை­வ­ராக வந்­தி­ருக்க முடி­யுமா? இன்று அவ­ரது அர­சியல் நிலை எப்­படி இருந்­தி­ருக்கும் என்றும் சிந்­தித்தேன்.

இச்­சிந்­த­னை­களின் முடி­விலே ஹஸ­ன­லியின் பக்கம் நியாயம் இருப்­பதை உணர்ந்து அவர் பக்கம் நிற்­கின்றேன்.

என்­ன­ருமைச் சகோ­த­ரர்­களே!
* நமது கட்­சியில் அதி­கா­ர­முள்ள பத­விகள் இரண்­டுதான் உள்­ளன. ஒன்று தலைவர், மற்­றை­யது செய­லாளர் நாயகம் ஆகும். பெருந்­த­லைவர் அஷ்ரஃப் அவர்கள் தலை­வ­ராக இருந்த காலத்தில் கட்சி நிறு­வப்­பட்ட போது ஒரு குறு­கிய காலத்தைத் தவிர மற்ற எல்லாக் காலமும், தலைவர் கிழக்கில் அம்­பாறை மாவட்­டத்தைச் சேர்ந்­த­வ­ராக இருந்த கார­ணத்­தினால், ஆவ­ணங்­களில் கையெ­ழுத்­திடும் அதி­கா­ர­முள்ள இரண்­டா­வது உச்ச நிலை பத­வி­யான செய­லாளர் நாயகம் பத­வியை வட, கிழக்­குக்கு வெளியே வழங்கி அலங்­க­ரித்தார். இதுவே நமது கட்சி பேணி­வந்த பிராந்­திய ரீதி­யான அதி­கார சம­நி­லை­யாகும்.

ஹஸ­ன­லிக்கு நடந்த கதிக்குப் பிறகு இந்தச் சம­நிலை சிதைந்து சுக்­கு­நூ­றா­கி­விட்­டது. இச்­ச­ம­நி­லையை வேண்டி ஹஸ­னலி கேட்கும் நியா­யத்­துக்கு காது கொடுத்­துள்ளேன்.

* ஹஸ­ன­லியை காலி டப்­பா­வாக்கி, செய­லாளர் நாயகம் பதவி அப்­ப­டியே இருக்க யானை தின்ற விளாங்காய் போல அப்­ப­த­வியை வெறும் கோதாக்கி, சாற்றை பிழிந்து எடுத்து சக்­கை­யாக்கி, சம்­பி­ர­தாய பதவி நிலை­யாக இதனைக் கீழி­றக்கி வைக்­கப்­பட்­டுள்­ளது. பிழிந்­தெ­டுத்த சாறு இது­வரை காலமும் உச்ச பீடத்தில் எவ்­வித பத­வி­க­ளையும் வகிக்­கா­த­வரும், அனு­பவம் இல்­லா­த­வ­ரு­மான ஒரு­வ­ருக்கு பரி­ச­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

அதுவும் இவரை தலை­வரே நிய­மிக்­கலாம், நினைத்த மாத்­தி­ரத்தில் நீக்கம் செய்­யலாம், மேலும் இவ­ருக்கு சம்­பளம் வழங்­கப்­படும்.

* இவ்­வாறு செய்­யப்­பட்­டி­ருப்­பது அதி­காரம் பொருந்­திய இரு பத­வி­க­ளையும் ஒரு­வரே வைத்­தி­ருப்­ப­தற்கு சம­மா­னது.

சம்­பளம் கொடுத்து, நினைத்தால் நிய­மித்து, பிடிக்­கா­விட்டால் நீக்கி தன் விருப்­பப்­படி செய­லா­ளரை ஆட்­டு­விக்­கலாம் என்று இருப்­பது இரு அதி­கா­ரங்­க­ளையும் ஒரு­வரே பிர­யோ­கிக்கும் தந்­தி­ர­மல்­லாமல் வேறென்ன?

இந்த அதி­கார பிர­யோகம் எனக்குத் தெரிந்­த­வரை அல் குர்­ஆ­னிலும் இல்லை, ஹதீ­ஸிலும் இல்லை, ஜன­நா­யக நடை­மு­றை­யிலும் இல்லை, மார்க்­ஸிஸ வழி­மு­றை­க­ளிலும் இல்லை. எனவே ஹஸ­ன­லியின் நியாயத்தின் பக்கம் நிற்க முடி­வெ­டுத்­துள்ளேன்.

சட்­டத்தின் குறுக்கு வெட்டு முகத்­தையும், நெடுக்கு வெட்டு முகத்­தையும் நன்கு தெரிந்த நண்­பர்­களே! இப்­ப­டி­யெல்லாம் செய்­யா­தீர்கள். நமது கட்சி ஏனைய கட்­சி­களைப் போல் தடா­கத்தில் பூத்த கட்­சியல்ல நெருப்­பிலும், பேர­ழி­விலும் இருந்து முளைத்த கட்­சி­யாகும்.

1985 ஆம் ஆண்டு தொடக்கம் 2005 ஆம் ஆண்டு வரை­யான 20 ஆண்­டுகள் வட­கி­ழக்கில் வாழும் முஸ்­லிம்கள் சொல்­லொணாத் துய­ரங்­களை அனு­ப­வித்­தமை அம்­மக்கள் முஸ்­லிம்கள் என்­ப­தற்­காக அல்ல. முஸ்லிம் மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் என்ற அர­சியல் கட்­சியில் ஒன்­றி­ணைந்து நிறு­வ­ன­ம­யப்­பட்டு விட்­டார்கள், இதனை சின்­னாபின்ன­மாக்கி சிதைத்து அழிக்க வேண்டும், முஸ்­லிம்­களை பயம் காட்டி பணிய வைத்து முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு இருக்கும் மக்கள் ஆத­ரவை இல்­லாமல் செய்­ய­வேண்டும் என்­ப­தற்­கா­கத்தான்.

* அல்­லாஹ்வை மட்­டுமே சர­ண­டையும் முஸ்லிம் மக்கள் காத்­தான்­குடி பள்­ளி­வா­யில்­களில் சுஜுதில் இருக்கும் போது சுட்டு கொல்­லப்­பட்­டார்­களே ஏன்?

* அல்லாஹ் இட்ட ஐந்­தா­வது கட­மை­யான ஹஜ்ஜை முடித்­து­விட்டு வீடு நோக்கி வந்த இரு­நூற்­றுக்கும் அதி­க­மான ஹஜ்­ஜா­ஜிகள் கிரான்­குளம் பகு­தியில் சுடப்­பட்ட போது அல்­லாஹு அக்பர் என்று படைத்­த­வனை அழைத்த வண்ணம் மௌத்­தாகி போனது எதற்­காக?

* காரைத்­தீவு சந்­தியில் தாங்கள் எதிர்த்து போராடும் சிங்கள பொலி­ஸா­ரையே விடு­தலை செய்­து­விட்டு, தனியே முஸ்லிம் பொலிஸ்­கா­ரர்­களை மட்டும் பிரித்­தெ­டுத்து கொன்­றது ஏன்?

* ஏறா­வூரில் கர்­ப்பி­ணித்தாய் வயிற்றில் இருந்த சிசுக்கள் உட்­பட தூக்­கத்தில் இருந்த ஆண்கள், பெண்கள், சிறு­பிள்­ளைகள் என அனை­வ­ரையும் வெட்­டியும், சுட்டும் கதறக் கதறக் கொன்­றது எதற்­காக?

* அம்­பாறைக் கரை­யோரப் பகு­தி­களில் உள்ள வயல் வரம்­பு­க­ளிலும், வீதி­யோ­ரங்­க­ளிலும் முஸ்­லிம்கள் படு­கொலை செய்­யப்­பட்­டதும், பள்­ளி­களில் குண்டு வெடிக்க வைக்­கப்­பட்­டதும் ஏன்?

* மட்­டக்­க­ளப்பில் 32 குக்­கி­ரா­மங்­களில் வாழ்ந்தும், தொழில் செய்தும் வந்த முஸ்­லிம்கள் ஈவி­ரக்­க­மின்றி வெளி­யேற்­றப்­பட்­டது என்ன கார­ணத்­திற்­காக?

* திரு­ம­லையின் பல கிரா­மங்­களில் இருந்து முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­டதும் கல­வ­ரங்­களில் பல உயிர்கள் காவு கொள்­ளப்­பட்­டதும், மூதூ­ரிலே நமது அர­சியல் மேடை­யிலே குண்டு வைத்து கட்­சியின் பிர­தான வேட்­பாளர் உட்­பட பலரை கொன்­றதும், தோப்­பூ­ரிலே பல கொலைகள் செய்­ததும் ஏன்?

* பொலன்­ன­றுவை, மட்­டக்­க­ளப்பு எல்லைக் கிரா­மங்­க­ளான அழுஞ்சிப் பொத்­தானை, புதூர், சுங்­காவில் போன்ற இடங்­களில் முஸ்­லிம்­களை நடு­நி­சியில் துப்­பாக்கி குண்­டு­க­ளுக்கும், கூரான கத்­தி­க­ளுக்கும் இரை­யாக்­கி­யது எது?

* மூதூரில் முஸ்­லிம்கள் மொத்­த­மாக வெளி­யேற்­றப்­பட்­டது ஏன்?

* வடக்கு, கிழக்கில் மீன்­பி­டிக்க சென்ற முஸ்­லிம்­களில் பலர் திரும்ப வர­வில்­லையே. ஏன்?

* எல்­லா­வற்­றிற்கும் மகுடம் வைத்தாற் போல வட­மா­காணம் முழு­வ­திலும் இருந்து ஒட்­டு­மொத்­த­மாக முஸ்­லிம்­களை விரட்­டி­ய­டித்­ததும், அவ்­வேளை அம்­முஸ்­லிம்­களைப் பார்த்து நீங்கள் அஷ்­ரஃப்­பிடம் போங்கள் என்றும் கூறி­னரே! ஏன்? ஏன்? எதற்­காக?

இப்­படி சம்­ப­வங்கள் இன்னும் ஏராளம். மடலின் சுருக்கம் கருதி முக்­கிய சம்­ப­வங்கள் சில­வற்றை மட்­டுமே குறிப்­பிட்­டி­ருக்­கிறேன்.

* இவ்­வாறு அனைத்து அநி­யா­யங்­களும் அவ­லங்­களும் நடத்­தப்­பட்­டது முஸ்­லிம்கள் என்­ப­தற்­காக அல்ல. முஸ்­லிம்கள், முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்கு ஆத­ர­வாக இருக்­கி­றார்கள் என்­ப­தற்­கா­கத்தான் என்­பதை இக்­கால கட்­டத்தில் புரிந்­து­கொள்­வது அவ­சி­ய­மாகும். இவ்­வாறு தாங்­கொணாத் துயரங்ளை எல்லாம் தாங்கிக்கொண்டு நமது கட்சியை நேசித்துப் பாதுகாத்த அந்த மக்கள் சார்பாக எனது மனசாட்சியை நீதியின் பக்கம் நீட்டிப் பார்த்தேன்.

இவ்வாறு இலட்சக்கணக்கான முஸ்லிம்களின் வேதனைகளின் மீட்சிக்காக உருவாக்கப்பட்ட நமது கட்சி தடுமாறவும், தடம் மாறவும் அனுமதியளிக்க முடியாது. அதனால் ஹஸனலியை சரிகண்டேன்.

* பேராளார் மாநாட்டில் நடந்தவற்றுக்கும், கட்டாய உச்ச பீட கூட்டத்தின் நிகழ்வுகளுக்கும் உச்சபீட உறுப்பினர்களாகிய நாம் சாட்சிகளாக இருக்கிறோம்.

அல்-குர்ஆனையும், ஹதீஸையும் வழிகாட்டியாக வைத்திருக்கும் நமது கட்சியில் பொய்யும், புரட்டும், ஏமாற்றும் அரங்கேற நாம் அனுமதிக்கலாமா? அனுமதித்துவிட்டு அல்லாஹ்விடம் மீள்வதில்லையா?

மனசாட்சியும், ஞாபகசக்தியும் உள்ள சுயநலமற்ற என்னருமை உச்சபீட உறுப்பினர்களே! அன்று இரவு நடந்த கட்டாய உச்சபீட கூட்டத்தில் நடந்தவைகளை நினைவு கூருங்கள்.

ஒன்று சேருங்கள். எவருக்கும் அநியாயம் இழைக்கவோ, யாருடைய பதவியை பறிக்கவோ அல்ல. நீதி கேட்கவும், நியாயம் கேட்கவும், நமது மரத்தை காக்கவும், நமது கட்சியை தூய்மைப்படுத்தவும், நமது கட்சியின் வரலாற்றை புதிய முஸ்லிம் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கவும், கட்சிக்கு புதிய இரத்தம் பாய்ச்சவும், முஸ்லிம் காங்கிரஸ் இலங்கை முஸ்லிம்களின் நம்பிக்கை நட்சத்திரம் என்று மீள நிரூபிக்கவும், தனிமனித போலி விசுவாச படையாக அன்றி, படைத்த வல்ல அல்லாஹ்வையும் அவனது ரசூலையும் விசுவாசிக்கும் படையாக எழுந்து நிற்கவும் வேண்டும். அல்லாஹு அக்பர்.

இப்படிக்கு, பஷீர் சேகுதாவூத்.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *