பிரதான செய்திகள்

முஸ்லிம் விவகாரங்கள் பிரதி அமைச்சரை நீக்கிய ஜனாதிபதி

பிரதியமைச்சர் துலிப் விஜேசேகர வகித்த பிரதியமைச்சுப் பொறுப்பு அவரிடமிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி துலிப் விஜேசேகர அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார்.

அவருக்கு தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகாரங்கள் பிரதி அமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருந்தது.

எனினும், அவர் கடந்த காலங்களில் அரசாங்கத்தை பகிரங்கமாக விமர்சித்து வந்திருந்ததுடன், கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவாகவும் செயற்பட்டிருந்தார்.

இதன் காரணமாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி துலிப் விஜேசேகரவின் அமைச்சுப் பதவியை பறித்துள்ளார்.

Related posts

இனப்பிரச்சனை தீர்வு! மஹிந்த ராஜபக்ஷ குழப்பும் நடவடிக்கையில் – இரா. சம்பந்தன்

wpengine

தேனிலவுக்காக இலங்கை வந்த ரஷ்ய பிரஜை அலையில் அடித்து செல்லப்பட்டு மரணம் .

Maash

பஸ்ஸில் சத்தமான பாடல் ஒலிபரப்பினால் 1955 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு

wpengine