முஸ்லிம் வாக்குகளை சூரையாட அம்பாரையில் அதாவுல்லா,இஸ்மாயில்

பாகம்-2

மறைந்த மாமனிதர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் அன்று வகுத்த வியூகத்தை இன்று சிங்கள சகோதர வேட்பாளர்கள் எம்மிடத்தில் விதைத்ததே காரணம்
எப்படியும் மொட்டு அதிக வாக்கினை பெறும் எனவே இவற்றில் 7 பேர் சிிங்கள சகோதர வேட்பாளர்கள் 1 நபர் தமிழ் சகோதர வேட்பாளர் , 2 முஸ்லிம் வேட்பாளர்கள்
இதில் அதா உல்லா, வீசி இஸ்மாயில் மற்றும் சலீம் அவர்களின் ஊடுருவலால் எமது (1,2,3) எனும் வியூகம் இடம்பெறும் அவ்வாறு இடம்பெற்றால் எங்களது பிரதிநிதிதுவத்தினை இழக்க நேரிடும் எனும் அச்சத்தினால் சில முஸ்லிம் அறிவாளிகள் சிங்கள சகோதர வேட்பாளர்களுக்கு கனக்கு காட்டியதாலே இவ்வாறு மொட்டுவில் பிரவேசிக்க முடியாமல் போனது.
இதன் விளைவால் நிச்சயிக்கப்பட்ட 3 பிரதிநிதிகளையும் “மயிரிளையில் தவறபிட்டது”

இனி அடுத்த நகர்வுதான் என்ன? எவ்வாறு முஸ்லிம் பிரதிநிதிகளை அதிகரிக்கலாம் என்ற சிந்தனை ஒரு கேள்வியாகவே எம்மிடத்தில் காணப்படுகிறது இந்த நிலைக்கு காரணம் இறைவனின் சாபமா அல்லது கடந்த கால பிரதிநிதிகளின் அசால்ட்டையான நகர்வுகளா?????…..

கடந்த பொது தேர்தலின் போது
ஐக்கிய தேசிய கட்சி சார்பாக 3 பிரதிநிதிகளை எம்மண் கண்டது
அத்துடன் தேசிய பட்டியலாக மேலதிகமாக 2 பிரதிநிதிகள்
ஆகபோக மொத்தமாக முஸ்லிம் 5 பேரைக் கொண்டு அழகு பார்த்தது எம்மாவட்டம்

அதே சமயம் சிங்கள பிரதிநிதிகள் 4 பேர்
தமிழ் தரப்பினர் சார்பாக ஒருவர்

ஆகபோக 7 பிரதிநிதிகளை கொண்டிருக்கும் இடத்தில் 10 பிரதிநிதிகள் அதிலும் அதிகம் எம் சமூகத்தவர்கள் ( நன்றாக அனைவரும் சிந்திக்கும் தருனம் இது)

இம்முறை எவ்வாறு இதனை குறைப்பு செய்ய வேணும் இதற்கான வியூகம் சரியாக வகுக்கப்பட்டது
மொட்டுவில்
7 சிங்கள பிரதிநிதிகள்
1 தமிழர்
2 முஸ்லிம்

கடந்த முறை ஜனாதிபதி தேர்தலில் விட்ட தவறை இம்முறை யாரும் செய்ய வேண்டாம் எனவே எனக்கு வாக்கு போடாட்டியும் எம் சமூகத்துக்காக வேண்டியாவது அடிப்படை சின்னத்துக்கு வாக்கு அளித்து எம்மன்னையும் எமது சந்ததியினரையும் மீட்டெடுப்போம் என்ற மாயவலையை விரித்து மொட்டு சார்பாக சிறுபான்மை ரீதியாக களம் இறக்கப்பட்டவர்களின் வீர பேச்சாகவும் ,மாயகருத்தாகவும் காணப்படும் இதில் அச்சம் கண்டு அல்லது உன்மையாக இருக்கும் என்று நினைத்து வாக்களித்து வாக்குகள் எம்மாவட்டத்தில் அளிக்கப்பட்டாலும் மனாப்பே என்ற தெளிவு தெரியா பாமர மக்கள் இவர்களுடைய வாக்கை வேதவாக்காக என்னி செயற்பட்டால் இதற்கான விடை சிங்கள சகோதர வேட்பாளர்கள் மத்தியில் கச்சேரியில் விடை கிடைக்கும்.

இதில் ஒரு முஸ்லிம் பிரதிநிதி வருவதாக இருந்தால் நிச்சயமாக நாம் மொட்டுக்கு வாக்களிப்பது தார்மீக பொறுப்பு உள்ளது. அவ்வாறுதான் இல்லையே நாம் ஏன் மீண்டும் வரலாற்று தவறை செய்ய வேண்டும்

நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி கோட்டபே ராஜபக்‌ஷ அவர்களினால் நாட்டில் அமுலுக்கு வரும் வகையில் கீழுள்ள சலுகைகள் நேற்று வழங்கப்பட்டுள்ளது.

1.வருமான வரி, வாட் வரி, வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்தல், 15,000 ரூபாவிற்கு குறைவான நீர், மின்சார கட்டணங்கள், வரி அறவீடுகள், வங்கி காசோலை செல்லுபடியாகும் காலம், 50,000திற்கும் குறைவான கடன் அட்டை அறவீடுகளை 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரை செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

2.முச்சக்கரவண்டிகளை கடன் அடிப்படையில் (லீசிங்) கொள்வனவு செய்துள்ளவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு தொகையை செலுத்தும் காலம் 6 மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

3.அரச ஊழியர்கள் மற்றும் தனியார் பிரிவுகளின் நிர்வாகத்தை அல்லாத ஊழியர்களின் சம்பளத்தை முன்னிலைப்படுத்தி பெற்றுக் கொண்ட மாதாந்த கடன் தொகை அறவீடுகள் 2020ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

4.வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து 10 லட்சம் ரூபாவிற்கு குறைவான தொகையை கடனான பெற்றுக் கொண்டவர்களிடமிருந்து அறவிடப்படும் மாதாந்த கொடுப்பனவு தொகையை மூன்று மாதாங்களுக்கு அறவிடாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

5.தொழிலுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள பட்டதாரிகளின் மார்ச் மாத கொடுப்பனவான 20,000 ரூபாவை அவர்களின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.

6.கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளில் உள்ள சுகாதார, போலீஸ், சிவில் பாதுகாப்பு படை உள்ளிட்ட அரச ஊழியர்களுக்கான ”அக்ரஹார” காப்புறுதி திட்டம் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

7.சுற்றுலா, ஆடை, சிறு மற்றும் மத்திய தர வர்த்தகம் ஆகியவற்றிற்காக 6 மாத கால கடன் நிவாரண காலத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் அதற்காக நிதியை இலங்கை மத்திய வங்கி வழங்குகின்றது.

8.இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை காப்புறுதி கூட்டுதாபனம், ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியன ஒன்றிணைந்து திரைசேறி முறிகளுக்கான நிதி முதலீடுகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில், அதிலிருந்து நிதி வர்த்தகத்திற்கு 7 சதவீத வட்டி வீதத்தை உறுதிப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

9.மாதாந்த கடன் நிதியான 50,000 வரை உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்களுக்காக பயன்படுத்தப்படும் கடன் அட்டைகளுக்கான கடன் வட்டி வீதத்தை 15 வீதமாக்குவதுடன், மாதாந்தம் குறைந்தது 50 வீதமான கடனையே அறிவிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

10.ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அனைத்து வங்கிகளின் கிளைகளும், வாடிக்கையாளர்களுக்கு இயலுமான அளவு சேவையை வழங்கும் வகையில் திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

11.இலங்கை துறைமுகம், சுங்கம் மற்றும் ஏனைய நிறுவனங்களின் ஊடாக மக்களுக்கு அத்தியாவசிய உணவுகள், உரம், மருந்து வகைகள் மற்றும் எரிப்பொருள் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

12.சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் கூட்டுறவு கடனட்டை உரிமையாளர்களுக்காக 10,000 ரூபா வட்டியற்ற மேலதிக தொகையை அனைத்து கூட்டுறவு வங்கிகளின் ஊடாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

13.லங்கா சதொச மற்றும் கூட்டுறவு வர்த்தக நிலையங்கள் ஆகியவற்றில் வெட் வரி மற்றும் ஏனைய பிரதேச வரிகளை இல்லாது செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

14.குறைந்த வருமானத்தை பெறுவோருக்காக போஷாக்கு உணவு வகைகளை வழங்குவதற்கு பதிலாக, சமுர்த்தி அதிகார சபை மற்றும் குறைந்த வருமானத்தை பெறும் குடும்பங்களுக்காக உரிமையாளர் சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும்.

15.அந்த குடும்பங்களில் முதியோர் அல்லது குறைந்த வருமானத்தை பெறுவோர் இருப்பார்களாயின் அவர்களுக்கு அரிசி, பருப்பு. வெங்காயம் ஆகியவற்றுக்கான உணவு சான்றிதழை வாராந்தம் வழங்க வேண்டும்.

16.கோவிட் – 19 வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்கும், சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஜனாதிபதி நிதியத்தினால் விசேட வங்கி கணக்கொன்று இலங்கை வங்கியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து 10 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாட்டு உதவியாளர்கள் இதற்கான உதவிகளை வழங்கும் போது, அவர்களுக்கான வரி மற்றும் வெளிநாட்டு அந்நிய செலவணி கட்டுபாடுகள் தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

17.சார்க் நாடுகளின் கொரோனா நிதியத்திற்காக இலங்கை அரசாங்கம் 05 மில்லியன் அமெரிக்க டாலரை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவுகள் உண்மையில் சிறந்த ஒரு முடிவுகளாகும் நாட்டின் நிலைகருதி இவ்வாறு மக்கள் பாதுகாப்பு கருதி செயற்படுவது சிறந்த ஒன்றாகும்

அதற்காக நாம் ஊர் பிரதிநிதித்துவத்தை இழக்க முடியுமா…..

மறைந்த அன்வர் அவர்களின் உரையில் தெளிவாக பேசுகிறார் பருப்பு பிரச்சினை பற்றியும், நெத்தலிக்கருவாடு பிரச்சினை பற்றியும் அதை அதை எங்க வைக்கனுமோ அங்க வைத்தால் சரி இங்கு திகாமடுல்லையில் மொட்டுவில் முஸ்லிம் வேட்பாளர்கள் பிரதிநிதி ஆக போவது இல்லை என்பது அறிவுபூர்வமான கருத்து அப்படி என்றால் அடுத்த இலக்கு என்ன?

தொடரும் பாகம்-3

 361 total views,  3 views today

Comments

comments

Shares