பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முஸ்லிம் மீள்குடியேற்றம், றிஷாட்டிற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் நடாத்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு

(பாறுக் ஷிஹான்)

முல்லைத்தீவு மாவட்டத்தில் காடழிப்பினை மேற்கொண்டு திட்டமிட்ட முஸ்லீம் குடியேற்றங்களுக்கு  எதிர்ப்பு தெரிவித்து  பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்று  நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது.

இம் மாவட்டத்தில் கூழாமுறிப்பு எனும் பகுதியில் உள்ள சுமார் 177 ஏக்கர் காட்டினை அழித்து குடியேற்றங்கள் மேற்கொள்ளபட உள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலய முன்றலில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் கூழா முறிப்பு நோக்கி ஆர்ப்பாட்ட பேரணி செல்லவுள்ளது.

குறித்த போராட்டத்திற்கு அணிதிரளுமாறு சமூக வலைத்தளங்கள் ஊடாக சட்டவிரோத குடியேற்றங்களை எதிர்க்கும் இளைஞர் அணி எனும் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த கூழாமுறிப்பு எனும் பகுதியில் உள்ள சுமார் 177 ஏக்கர் காட்டினை அழித்து முஸ்லீம்களை மீள் குடியேற்றம் செய்ய வன்னி அமைச்சர் ஒருவர் ஈடுபட்டு வருவதாக இளைஞர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இப்போராட்டத்தின் பின்னணியில் வடக்கு மாகாண முதல்வர் உட்பட சிலர் ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வட, கிழக்கு மக்களின் காணி, மீள்குடியேற்ற பிரச்சினை! 24ஆம் திகதி விசேட கூட்டம்

wpengine

சில அரசியல்வாதிகள் என்னைக் குறிவைத்து கிளப்பிய புரளிகளில் இதுவும் ஒன்றாகும்”

wpengine

சதொச விற்பனை நிலையங்களை விரிவுபடுத்த விசேட நடவடிக்கை!

Editor