பிரதான செய்திகள்

முஸ்லிம் மக்களுக்கு எதிராக களங்கத்தை ஏற்படுத்தும் குழுக்களை அடையாளம் கண்டுள்ளோம்.

வன்முறைகளில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த இராணுவம் உச்சபட்ச அதிகாரங்களை பயன்படுத்தும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
வடமேல் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினையடுத்து பொது மக்களுக்கு விடுத்துள்ள விசேட செய்தியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட சில குழுக்களை அடையாளம் கண்டுள்ளோம்.

இவ்வாறானவர்கள் நேற்றிரவு சிலாபத்தில் ஆரம்பித்த வன்முறைகளை பல்வேறு பகுதியில் அரங்கேற்றியுள்ளனர்.

இதன்போது படையினர் அப் பகுதியில் முழுமையான அமைதியை ஏற்படுத்தியுள்ளனர்.

இவ்வாறானவர்களின் செயற்பாட்டினை கட்டுப்படுத்த இராணுவத்தினர் அதிகாரத்தை பயன்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதுடன், தேவை ஏற்படின் ஏனைய பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து அதிகபட்ச அதிகாரத்தை பயன்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மேலும் வட மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் மக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Related posts

அயோத்தியில் மசூதியை இடம் மாற்றி கட்டுவதா? அசாதுதீன் ஓவைசி ஆவேசம்

wpengine

இலங்கையில் ஆறு பேரில் ஒருவர் வறுமையில்! அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவிப்பு .

Maash

விவசாயிகளுக்கு சந்தோஷசமான செய்தி! நிவாரண அட்டை

wpengine