பிரதான செய்திகள்

முஸ்லிம், தமிழ், சிங்களம் இனங்கள் மத்தியிலும் இனவாதிகள் இருக்கின்றார்கள்.

முஸ்லிம்கள் ஒருபோதும் தனி மாகாணக் கோரிக்கையொன்றை வலியுறுத்தவில்லை என்று உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே சுமங்கல தேரருடான சந்திப்பில் அமைச்சர் பைசர் முஸ்தபா இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அமைச்சர் பைசர் முஸ்தபா, சிங்கள-முஸ்லிம் நல்லுறவு என்பது மன்னர்களின் காலம் தொட்டு சிறப்பான முறையில் பேணப்பட்டு வந்துள்ளது.

முஸ்லிம்கள் ஒருபோதும் தனி மாகாண கோரிக்கைகளை முன்வைக்கவில்லை. இனவாதிகளே அவ்வாறான பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளனர்.

இனவாதிகளுக்கு மதம் இல்லை. முஸ்லிம், தமிழ், சிங்களம் ஆகிய அனைத்து இனங்கள் மத்தியிலும் இனவாதிகள் இருக்கவே செய்கின்றார்கள் என்றும் அமைச்சர் பைசர் முஸ்தபா தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Related posts

அநுராதபுரம் – ஓமந்தை ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

Editor

அமைச்சர் ரிஷாட்பதியுதீனுடன் கடந்த வாரம் சென்ற களப் பயணங்கள் சமூக உணர்வுகளை உரசிச்சென்றது.

wpengine

ஆஸ்திரேலிய பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு ஊதிய உயர்வு

wpengine