பிரதான செய்திகள்

முஸ்லிம் செயலாளரை நீக்கிவிட்டு அகில விராஜ் நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அகில விராஜ் காரியவசம் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

கடந்த 30ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

அதற்கு முன்னர் நீண்ட காலமாக அவர் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் பதவியை வகித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஶ்ரீகொத்தாவில் வைத்து அமைச்சர் அகில விராஜ் கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்புகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்த வைபவத்தின் போது அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, காமினி ஜயவிக்கிரம பெரேரா, ரவி கருணாநாயக்க உள்ளிட்ட மூத்த அரசியல்வாதிகள் பலரும் சமூகமளித்திருந்தனர்.

Related posts

எங்கோ ஓரிடத்தில் தவறு நடந்துள்ளது! மீண்டும் ஒரு முறை செல்லும் நோக்கம் தனக்கு இல்லை

wpengine

பேஸ்புக் பாவனையாளர்களிடம் வேண்டுகோள்-உதய கம்மன்பில

wpengine

கிளிநொச்சி வெளிநோயாளர் புதிய கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர்

wpengine