இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்லாமிய மத வழிபாட்டு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (04) வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பிரதி சபாநாயகர் வைத்தியர் றிஸ்வி சாலிஹ், பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் ஆகியோர் தேசிய கொடி ஏற்றினர்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.நவாஸ், பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலிஹ், பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் ஆகியோர் உரையாற்றினர்.
இதன்போது நடைபெற்ற துஆ பிரார்த்தனையில் பலர் கலந்துகொண்டனர்.