முஸ்லிம் குடியேறிகள் சிலரை போப் இத்தாலிக்கு அழைத்துச் சென்றார்

கிரேக்கத் தீவிலுள்ள குடியேறிகள் முகாம்க்கு சென்றிருந்த போப் பிரான்ஸிஸ், அங்கிருந்த சிரியன் முஸ்லிம் அகதிகள் 12 பேரை தன்னுடன் இத்தாலிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

குடியேறிகளின் வருகையை கட்டுப்படுத்துவதற்காக, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் துருக்கிக்கு இடையில் ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்னதாகவே, இவர்கள் முகாம்களில் வைக்கப்பட்டிருந்தனர் என வத்திக்கான் தெரிவித்துள்ளது.

குடியேறிகளை வரவேற்பதற்கான நல்லெண்ணத்தை உருவாக்குவதற்காக, போப் பிரான்ஸிஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என அவரது அலுவலகம் கூறுகிறது.160416132718_pope-migrant_640x360_afp

முன்னதாக, லெஸ்போஸ் தீவிலுள்ள குடியேறிகளுடன் பேசிய போப் பிரான்ஸிஸ், “நீங்கள் எவரும் தனித்துவிடப்படவில்லை” என அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares