பிரதான செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில் குத்தாட்டம்: கேவலமான செயல்

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில், உலமாக்களை மேடையில் வைத்துக்கொண்டு குமரிகளின் குத்தாட்டத்தை அரங்கேற்றி குர்ஆன் ஹதீஸ்  யாப்பை கேவலப்படுத்தியுள்ளதுடன் இஸ்லாத்தில் அதிக பிடிப்புக்கொண்ட பாலமுனை மக்களையும் முஸ்லிம் காங்கிரஸ் அசிங்கப்படுத்திவிட்டது’ என உலமா கட்சித் தலைவர் கலாநிதி முபாறக் மௌலவி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்திருந்த அவர், ‘கோடிக் கணக்கில் செலவு செய்து ஒரு கட்சியின் மாநாடு நடத்தப்படும் போது அக்கட்சி பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் சாத்தியமான பிரச்சினகளுக்கு தீர்வுகள் காணப்படுவதே கட்சியின் அரசியல் வெற்றியாகும். இதனை விடுத்து மக்களிடம் தலைகளை மட்டும் காட்டுவது வெற்றியல்ல.12346378_1025429634188813_5827151972998760995_n

முஸ்லிம் காங்கிரஸின் மேற்படி மாநாட்டுக்கு கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி, அவற்றில் சிலவற்றுக்காவது தீர்வை பெற முயற்சித்திருக்கலாம்.12234905_1788042511429089_2671868638631002164_n

அதனை விடுத்து ஹக்கிம் என்ற தனி மனித புகழ்பாடும் வகையிலேயே இம்மாநாடு நடைபெற்றது. இதிலிருந்து முஸ்லிம்கள் படு மோசமாக ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாக புரிகின்றது.1506952_1788043984762275_852084863607195514_n936583_1788044401428900_1968803930412935422_n943887_1788042844762389_4775811627810872104_n

Related posts

ரோசியின் மலசல கூடத்திற்கே இவ்வளவு தொகை என்றால் பிரதமரின் மலசல கூடத்திற்கு எவ்வளவு செலவாகும்

wpengine

வன ஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளரின் இராஜினாமா அமைச்சரினால் நிராகரிப்பு

wpengine

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வடக்கு,கிழக்கில் தனித்து போட்டி திலங்க சுமதிபால

wpengine