முஸ்லிம் எயீட் அனுசரனையுடன் நிவாரணப் பொதிவழங்கலுடன் மருத்துவ முகாம்

(அஸீம் கிலாப்தீன்)

வெள்ள அனர்த்தத்தினைத் தொடர்ந்து நிவாரணப் பணிகளை உடனடியாக ஆரம்பித்த முஸ்லிம் எயீட், 21ம் திகதியன்று பாய்கள், பெட்சீட், டவல் அடங்கிய உணவு அல்லாத  ( Non- Food Items ) பொதிகளை மல்வான பிரதேசத்திலுள்ள ரக்பான கிராமத்தில் வெள்ளத்தினால் மிகவூம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வினியோகம் செய்தது. இதற்கான ஒத்துழைப்பினை அந்த பள்ளிவாசல் நம்பிக்கையாளர்  சபையினூடாக மேற்கொள்ளப்பட்டது. முஸ்லிம் எயீட் சிரேஷ்ட ஊழியர்கள் நிவாரணப் பொருட்களின் வினியோகச் செயற்பாடுகளை மேற்கொண்டன.

நிவாரணப் பணிகள் மற்றும் புனர்வாழ்வு செயற்பாடுகளில் தொடர்ச்சியாக முஸ்லிம் எயீட் ஈடுபடுவது தொடர்பான உரையாடல்,கொழும்பு மாவட்ட அரச அதிபர் சுனில் கன்னங்கர அவர்களுடன் முஸ்லிம் எயீட் மேற்கொண்டதைத் தொடர்ந்து,பாய்கள் மற்றும் பெட்சீட் உட்பட மேலும் 95 பொதிகள் கொலன்னாவ பிரதேச செயலத்தின் கீழ் செயற்படும்  அனர்த்த முகாமைத்துவப் பொறுப்பாளர் வசம் இதே தினம் முஸ்லிம் எயீட்யினால் கையளிப்பப்பட்டது.58c123d8-72b6-4e78-8b03-67f93e515c58

இந்நிகழ்வில் முஸ்லிம் எயீட் ஊழியர்களுடன் டீம் உறுப்பினர்கள் பலரும்  கலந்து கொண்டன.

மருத்துவ முகாம்கள்:

அவிஸ்ஸாவெல பிரதேசத்தைச் சேர்ந்த தல்துவ, கண்ணாத்தோட்ட ஆகிய இரண்டு கிராமங்களில் முஸ்லிம் எயீட் ஜம்இயத்துல் உலமா அமைப்புடன் இணைந்து இரண்டு மருத்துவ முகாம்களை முஸ்லிம் எயீட் மேற்கொண்டது 21ம் திகதி மேற்கொண்டது. ஏழு மருத்துவர்களும் 15 தொண்டர்களுடன் இணைந்து முஸ்லிம் எயீட் ஊழியர்கள் இம் மருத்துவ முகாம்களை நடாத்தினர்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 261 பெண்களும் 221 ஆண்களும் சிகிச்சையிளிக்கப்பட்டனர். இம்மருத்துவ முகாமிற்கான வைத்தியர்கள் மற்றும் மருந்தாளர்களை   சீடீஎஸ் எனப்படும் பொலநறுவ மாவட்டத்திற்கான முஸ்லிம் எயீட்  இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

 

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares