பிரதான செய்திகள்

முஸ்லிம் உரிமையாளரின் தனியார் ஆடை நிறுவனம் தீ

இரத்மலானை – பொருபன வீதியில் அமைந்துள்ள தனியார் ஆடை நிறுவன களஞ்சியசாலையில் இன்று தீ பரவியது.

களஞ்சியசாலையில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் பரவிய தீயினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன், தீயை அணைப்பதற்கு 2 மணித்தியாலங்கள் சென்றுள்ளன.

தீயை அணைப்பதற்கு தெஹிவளை, கல்கிசை மற்றும் மொரட்டுவ மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்களும் இரத்மலானை விமானப்படையினரின் தீயணைப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டன.

தீ பரவியதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

நட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள், சட்ட சபைகள் போன்றவற்றை மறுசீரமைக்க வேண்டும்

wpengine

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள விசேட தேவையுள்ள மீனவர்கள், விவசாயிகளுக்கு செயற்கை அவயவங்கள்.

Maash

சஜித் தலைமையிலான குழு இன்று விஷேட சந்திப்பு!ஜனாதிபதி முறைமையை நீக்குதல்

wpengine