பிரதான செய்திகள்

முஸ்லிம் அரசாங்க அதிபர் தலைமையில் தைபொங்கள் வவுனியாவில்

வவுனியா மாவட்ட செயலகத்தில் மாட்டு பொங்கல் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.
மாட்டுப் பொங்கல் தினமான நேற்று வவுனியா மாவட்ட செயலகத்தில் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த பொங்கல் நிகழ்வானது இன்று காலை மாவட்ட செயலக முன்றலில் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் குட்செட் கருமாரி அம்மன் ஆலய பிரதம குரு பிரபாகர குருக்கள் கலந்து கொண்டு விசேட பூஜை வழிபாட்டை மேற்கொண்டிருந்தார்.

குறித்த பொங்கல் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா மற்றும் அரச திணைக்கள மாவட்ட உதவிப் பணிப்பாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

மீள்குடியேற்றத்தை தடுப்பவர்கள் இனவாதிகளாகவும், பிரச்சினைக்குரியவர்களாகவும் காட்டுகின்றார்கள் அமைச்சர் றிஷாட்

wpengine

விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவிக்கு அருகதை அற்றவர்

wpengine

காலிதா ஜியா மகனுக்கு 7 ஆண்டுகள் சிறை

wpengine