பிரதான செய்திகள்

முஸ்லிம் அடிப்படைவாதத்தினால் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது- புபுது ஜாகொட

நாட்டிற்குள் தற்போது நடக்கும் வன்முறைகளால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சம்பிரதாய முஸ்லிம் அரசியல்வாதிகள், பள்ளிவாசல்கள் மற்றும் உலாமாக்கள் சபையினால் தீர்க்க முடியாது என முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

மருதனை சீ.எஸ்.ஆர். மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

நாட்டிற்குள் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை முற்போக்கான சமூக சக்திகள், இடதுசாரிகள் மற்றும் திட்டமிட்டு பணியாற்றும் மக்கள் சக்திகளால் மாத்திரம் தீர்க்க முடியும்.

ஒரு மாத காலத்திற்குள் பல்வேறு வன்முறைகள். இவற்றுக்கு அடிப்படைவாத ரீதியில் பதிலளிக்க வேண்டாம் என நாம் கேட்டுக்கொள்கிறோம்.

முஸ்லிம் அடிப்படைவாதத்தினால் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது. முஸ்லிம் அடிப்படைவாதம் பிரச்சினையை உக்கிரமடைய செய்யும். முஸ்லிம் அடிப்படைவாதத்தின் உதவியுடன் இந்த பிரச்சினை தீர்க்க முயற்சிக்க வேண்டாம்.

முஸ்லிம் அடிப்படைவாத குழுக்களை வலுப்படுத்த வேண்டாம். மக்கள் அவற்றுக்கு ஆதரவளிக்க வேண்டாம்.

சமூகத்தில் இருக்கும் முற்போக்கு சக்திகள், இடதுசாரி மற்றும் இனவாதத்திற்கு எதிரானவர்கள் மீது நம்பிக்கை வைக்குமாறு நாம் முஸ்லிம் மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

இவர்கள் தற்போது தலையீடுகளை மேற்கொண்டு வருகின்றனர். வன்முறைக்கு வன்முறையால் பதிலளிக்க வேண்டாம்.

நாட்டில் இருக்கும் முற்போக்கு, இடதுசாரி, லிபரல் கொள்கையை கொண்டுள்ளவர்களை இந்த பிரச்சினையில் தலையிடுமாறு கோருகிறோம். அனைவருடனும் இணைந்து கூட்டு மக்கள் சக்தியை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என புபுது ஜாகொட குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Duties and functions of new Ministers gazetted

wpengine

கைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட கிராமிய அபிவிருத்திக் கருத்திட்டம்-சந்திரிக்கா

wpengine

இனமதமொழி வேறுபாடின்றி ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென மக்கள் கோருகின்றனர்.

wpengine