பிரதான செய்திகள்

முஸ்லிம்கள் என்றால் எவ்வளவு அடித்தாலும் ஐ.தே.கட்சி தான் என்ற நிலையை மாற்ற வேண்டும்

கோத்தாவின் பிரஜாவுரிமையை கேள்விக்குட்படுத்தி தொடரப்பட்ட வழக்கை நீதி மன்றம் தள்ளுபடி செய்தமை நீதிக்கு கிடைத்த வெற்றி என்பதுடன் இத்தகைய வெற்றியை நோக்கிய பயணத்தில் முஸ்லிம்களும் இணைந்து கொள்ள வேண்டும் என உலமா கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.


இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் மஜீத் தெரிவித்துள்ளதாவது,
முஸ்லிம் மக்கள் தமது அர்த்தமற்ற ராஜபக்ஷ எதிர்ப்பு மனோ நிலையில் இருந்து மீள வேண்டும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களில் பலர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நின்றது பிழையாக இருப்பினும் அதை ஓரளவு ஜீரணிக்கலாம். ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமர் ரணில் மற்றும் அமைச்சர் சஜித்தின் இந்த நான்கரை வருட ஆட்சி என்பது முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் இருண்ட யுகமாக இருந்தும் இன்னமும் அத்தகைய கட்சிக்கு ஆதரவளிப்பது கண்ணை திறந்து கொண்டே குழியில் விழுவதாகும்.

இந்த ஆட்சியில் நடந்த சம்பவங்களுக்கு பின்னால் மஹிந்த இருப்பதாக பாமர முஸ்லிம்களிடம் கதைகளை கட்டிவிட்டுள்ளனர்.
அப்படி என்றால் ஆட்சி அதிகாரம் யார் கையில் உள்ளது என்பதை புரியாதவர்கள் அல்ல முஸ்லிம்கள்.

உங்கள் வீட்டுக்கு எவனாவது விரோதி வந்து உங்கள் தாயை அல்லது மனைவியை தாக்கினால் உங்கள் தந்தையிடம் அல்லது உங்களிடம் ஆயுதமும், அதிகாரமும் இருந்து தாக்குபவனை தடுக்க முனையாமல் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தால் யார் இங்கு குற்றவாளி என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

இதே போன்றுதான் இந்த அரசு முஸ்லிம்கள் தாக்கப்படுவதை வேடிக்கை பார்த்தது. உண்மையில் தாக்கியவர்கள் மஹிந்த ஆதரவாளர்களாக இருந்தால் இதுதான் சந்தர்ப்பம் என அரசு சுட்டுத்தள்ளியிருக்கும்.
ஊரடங்கு சட்டம் போட்டு முஸ்லிம்களின் கடைகளையும் பள்ளிவாயல்களையும் எரிப்பதற்கு துணை போன ஐ.தே.கவின் உண்மை முகத்தை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கோத்தபாய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அவர் வெற்றி பெறுவது நூறு வீதம் உறுதி என்பதால்த்தான் அவருக்கெதிராக வழக்குகளை போட்டு அவரை போட்டியிடாமல் செய்யலாம் என முயல்கிறார்கள்.

இத்தகைய முயற்சிகளில் கோத்தா வெற்றி பெற்றுள்ளதை முதல் வெற்றி பெரு வெற்றியாக நாம் பார்க்க வேண்டும்.

முஸ்லிம்கள் என்றால் எவ்வளவு அடித்தாலும் ஐ.தே.கட்சி தான் என்ற நிலையை மாற்றி நமது பள்ளிவாயல்களை தாக்கி பல உரிமைகளையும் ஒழித்துக்கட்டிய இந்த ஆட்சிக்கு பாடம் கற்பிக்க முஸ்லிம்கள் முன் வரவேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

பௌத்த பிக்குகள் கண்டி பள்ளிவாசலுக்கு முன்னால் ஆர்பாட்டம்

wpengine

இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் மக்களுக்கான 10000 ரூபா கொடுப்பனவு வழங்க யார் காரணம்

wpengine

லங்கா பிரீமியர் லீக் 2023 போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஆரம்பமானது!

Editor