முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதி செய்யுங்கள்

கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.


அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்கவுக்கு இந்த கோரிக்கை அடங்கிய கடிதத்தை அனுப்பியுள்ளது.


கோவிட் – 19 வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக போராடும் அனைத்து சுகாதார சேவை அதிகாரிகளின் சேவைகளை பாராட்டுவதாகவும் உலமா சபை கூறியுள்ளது.


உலக சுகாதார அமைப்பின் வழிக்காட்டலுக்கு அமைய, உலகில் 180 நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் செயற்பாடுகளை ஆராய்ந்து, எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை மீளாய்வு செய்து, கோவிட் – 19 வைரஸ் தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை உரிய பாதுகாப்புடன், பொலிஸ் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பின் கீழ் நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தனது கடித்தில் கூறியுள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares