முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி அனுமதி

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடையும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனுமதி வழங்கியுள்ளார்.


ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நீதி அமைச்சர் அலி சப்ரி ஜனாதிபதியிடம் இது தொடர்பாக எடுத்துரைத்துள்ளார்.


இதன்போதே ஜனாதிபதி மேற்படி அனுமதியை வழங்கியுள்ளார்.


அதற்கமைய கொரோனாத் தொற்றால் இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை முதல் கட்டமாக மன்னார் பிரதேசத்தில் இடமொன்றை ஒதுக்கி அடக்கம் செய்வதற்கு ஆராயப்பட்டு வருகின்றது.


இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானதன் பின்னரே இந்த நடைமுறை அமுலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதேவேளை, இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 14285ஆக உயர்ந்துள்ளது. இன்று மாத்திரம் 356 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், 5370 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 8880 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 36 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares