பிரதான செய்திகள்

முழங்காவில் நாச்சிக்குடாப்பகுதியில் 2 கோடி நஷ்டம்

முழங்காவில் நாச்சிக்குடாப்பகுதியில் உள்ள கண்ணன் பல்பொருள் வாணியம் தீப்பிடித்து  எரிந்ததில் சுமார் இரண்டு கோடி பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இன்று அதிகாலை பன்னிரெண்டு நாற்ப்பத்தைந்து மணியளவில் கடை உரிமையாளறிற்கு நண்பர்களால் கடை எறிவதாக வழங்கப்பட்ட  தகவலுக்கு அமைவாக கடை உரிமையாளரால் இராணுவத்தினருக்கும் கடற்படையினருக்கும் மற்றும் தீயணைப்பு பிரிவினரிற்கும் தகவல் வழங்கப்பட்டதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த இராணுவ  கடற்படை நீர்த்தாங்கி வாகனங்கள் உட்பட தீயணைப்பு வாகனம்  என்பன தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட பொழுதும் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

 

குறித்த தீ திட்டமிட்டு  மூட்டப்பட்டிருக்கலாம் என பொலிஸாரால் சந்தேகிக்கப்படுகின்ற நிலையிலும் சந்தேக நபர்கள் யாரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை எனினும் மேலதிக விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வேட்பாளர்களும் பேஸ்புக் தொலைக்காடசிகளும்

wpengine

அவர சிகிச்சைப் பிரிவில் கீதா குமாரசிங்க

wpengine

யாழ்ப்பாணத்தில்ஹிருணிகா மீது மொட்டு கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி

wpengine