பிரதான செய்திகள்

முல்லைத்தீவு வைத்தியசாலையில் மக்கள் அவதி

முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு சென்ற வெளிநோயாளர்கள் வைத்தியம் பெறுவதில் அசௌகரியங்களை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வைத்தியரை சந்திக்கும் (கிளினிக்) வெளிநோயாளர்களே இவ்வாறு அவதியுற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வைத்தியசாலையிக்கு இரண்டு மாதத்திற்கு ஒரு தடவையே வைத்தியர்கள் சென்று பார்வையிடுகின்றதாக நோயாளர்கள் சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை, தமது நோய் குணமடைய வைத்தியரை சந்திப்பதில் நெருக்கடியான நிலை ஏற்படுகின்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவ்வாறான சூழ்நிலை காரணமாக குறித்த வைத்தியசாலைக்கு இன்று சென்ற பல வெளிநோயாளர்கள் வைத்தியம் பெறமுடியாமல் திரும்பிச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பல்கலைக்கழக மாணவர்களுக்கான வட்டியில்லாத கடன் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

Editor

ஜேர்மனியில் கடும் பனி! விமானங்கள் ரத்து

wpengine

தவம் அவர்களே! அமைச்சர் றிஷாட் பதியுதீன் ஏன்? சுயபரிசீலனை செய்ய வேண்டும்

wpengine