பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முல்லைத்தீவு மாவட்ட பயிர்ச்செய்கை நெல் கொள்வனவு கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2021ம் ஆண்டின் சிறுபோக பயிர்ச்செய்கை மற்றும் நெல் கொள்வனவு தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக சிறிய மாநாட்டு மண்டபத்தில் நேற்று (22) மு.ப 10.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சிறுபோக பயிர்ச் செய்கைக்கான பசளை மானியங்களை பசளை உரச் செயலகத்திற்கு உறுதிப்படுத்தி அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் நெல் கொள்வனவு தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மாவட்ட விவசாய பணிப்பாளர் R.கோகுலதாசன், கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர், நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிராந்திய உதவி முகாமையாளர், கமநல சேவைகள் திணைக்கள மற்றும் மாவட்ட செயலக விவசாயக் கிளைகளின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடவிதான உத்தியோகத்தர் என பல்வேறு தரப்பட்டடோர் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

பாடசாலை நேரத்தில் கவனம் செலுத்தும் வட மாகாண சபை

wpengine

பாராளுமன்றத்தில் 5000 ரூபா பணத்தை சாப்பிட்ட முஷ்ரப் எம்.பி! பணம் மோகம்

wpengine

முசலி நில மீட்பு போராட்டத்தை காட்டிக்கொடுத்து,மலினப்படுத்துவதற்கு துணை-அமைச்சர் றிஷாட் ஆவேசம்

wpengine