பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முல்லைத்தீவு மாவட்டத்தில் வயலுக்கு அறுவடைக்கு சென்றவர் சுட்டுக் கொலை

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட பாலைப்பாணி கிராமத்தில் கிளிநொச்சியினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி தெரியவருகையில், இன்று (06) காலை கிளிநொச்சியினை சேர்ந்த 48 வயதுடைய பாலராசா ஜெதீஸ்வரன் என்ற விவசாயி தனது வயலினை அறுவடை செய்வதற்காக சென்றுள்ளார். இதன்போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் மற்றும் தடையவியல் பொலிஸார் ஆகியேர் சென்று பார்வையிட்டுள்ளதுடன் உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

இந்த கொலையுடன் சம்மந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நீர் கட்டணம் அதிகரிக்கலாம் அமைச்சர் ஹக்கீம்! மக்களின் நிலை என்ன?

wpengine

19 வயது யுவதியுடன் தொடர்பு வைத்த 55 வயது குடும்பஸ்தர் – ஊர்மக்களில் தாக்குதலால் உயிரிழப்பு!

Editor

முசலி பிரதேச Champion ஆக மணற்குளம் இளைளுர் கழகம்

wpengine