முல்லைத்தீவு – கணுக்கேணி குளத்தின் வான் பாய ஆரம்பித்துள்ளது

முல்லைத்தீவு – கணுக்கேணி குளத்தினை அண்மித்த பகுதியில் இன்று நண்பகல் 12.30 மணிமுதல் 16.30 மணி வரை 67 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், கணுக்கேணி குளம் வான் பாய ஆரம்பித்துள்ளது.


முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்து வருகின்றது.


இந்நிலையில்,இன்று பகல் 12.30 மணிமுதல் 16.30 மணி வரையான காலப்பகுதியில் முத்தையன் கட்டுக்குளத்தின் கீழ் 21 மில்லிமீற்றர் மழையும், கணுக்கேணி குளம் மற்றும் மருதமடுக்குளம் ஆகியவற்றில் 67 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும்,உடையார்கட்டுகுளத்தின் கீழ் 20 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ் 50 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.


மேலும்,கணுக்கேணி குளம் அதன் நீர்க்கொள்ளளவை எட்டியதுடன் வான் பாய ஆரம்பித்துள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares