முல்லைத்தீவு இராணுவ பகுதியில் தீ! காரணம் தெரியவில்லை

முல்லைத்தீவு – 683வது இராணு படையணி தலைமை செயலக வளாகத்தில் நேற்று ஏற்பட்ட தீபரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


முல்லைத்தீவு- பரந்தன் பிரதான வீதி தேராவில் பகுதியில் அமைந்துள்ள 683வது இராணுவ படையணியின் தலைமை செயலக வளாக பகுதியில் பிற்பகல் திடிரென தீபரவல் ஏற்பட்டது.


இச்சூழ்நிலையில் விரைந்து செயற்பட்ட அப்பகுதி மக்களினால் குறித்த தீபரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.


அடையாளம் தெரியாதோரால் தேக்கு மரக்காடுகளில் வைக்கப்பட்ட தீ சருகுகளில் பற்றி வேகமாக பரவியது.
இந்நிலையில் உதிர்ந்த சருகுகளின் தொடர்பை துண்டித்து தீயை மேலும் பரவவிடாமல் தடுக்கும் முயற்சியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டிருந்தனர்.


சுமார் இரண்டு மணி நேர முயற்சியின் பின்னர் குறித்த தீ பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares