பிரதான செய்திகள்

முல்லைத்தீவில் வீடுகள் தரமானதாக இல்லை மக்கள் வெளியேற்றம்.

முல்லைத்தீவு – கரைதுரைப்பற்று, பொன்னகர் பகுதியில் இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட வீடுகள் தற்போது சேதமடைந்து குடியிருக்க முடியாத நிலையில் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

வீடுகளைப் பெற்றுக் கொண்ட மக்கள் அந்த வீடுகளை விட்டு தற்போது வெளியேறி வரும் நிலையில், கூடுதலான வீடுகள் யாரும் இன்றிய நிலையில் வெறுமையாகவே காணப்படுகின்றன.

இது தொடர்பில் கரைதுரைப்பற்று பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,

பொன்னகர் பகுதியில் வழங்கப்பட்ட வீடுகளை விட்டு மக்கள் வெளியேறி வருகின்றனர். குறித்த 50 வீடுகளும் தொடர்ச்சியாக மாற்றி வழங்கப்படுகின்ற போதும் அங்கு வந்து தங்கியிருப்பவர்கள் யாரும் தொடர்ந்து அங்கு இருப்பதற்கு விரும்பாது வீடுகளை விட்டுச் செல்கின்றனர்.

வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது குடியேறியவர்களுக்கே காணியின் ஆவணங்களை வழங்கியுள்ளதால் அதனை மாற்றி வழங்குவதிலும் பிரச்சினைகள் காணப்படுகின்றன.

இதேவேளை பொன்னகர் பகுதயில் உள்ள மேற்படி வீட்டுத்திட்டத்தில் குடி நீர்ப்பிரச்சினை மற்றும் வீடுகள் தரமானதாக இல்லை போன்ற காரணங்களால் அங்கு மக்கள் வாழ்வதற்கு விரும்புவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இஸ்லாமிய பெண்களுக்கு ஏனையோர் போன்று சம உரிமை வேண்டும்-WAN

wpengine

புலம்பெயர்ந்தோர் மடியில் பொழுது விடியும் வியூகம்!

wpengine

அரசாங்கத்திற்கு தெரிந்தும் ஏன் கத்தோலிக்க திருச்சபையின் பேராயருக்கு தெரிவிக்கவில்லை

wpengine