பிராந்திய செய்திமுல்லைத்தீவு

முல்லைத்தீவில் பல்லாயிரம் துப்பாக்கி ரவைகள் மீட்பு!

முல்லைத்தீவு சிலாவத்தை தியோநகர் காட்டு பகுதியில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் முல்லைத்தீவு பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (14) மீட்கப்பட்டுள்ளன. 

முல்லைத்தீவு சிலாவத்தை தியோநகர் காட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கடற்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து கடற்படையினரும், முல்லைத்தீவு பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனையிட்டு பார்த்தபோது உர பை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த உர பையில் இருந்து 1,400 ரி56 ரக துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, இந்த துப்பாக்கி ரவைகள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும்  இந்த  துப்பாக்கி ரவைகள் வெடிக்காத நிலையில் பழுதடைந்து இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் பணிபுரிவோருக்கு PCR பரிசோதனை

wpengine

24 மணிநேர கடவுச்சீட்டு அலுவலக சேவை ?

Maash

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு இடமளிக்கமாட்டோம் ; ஜெகதீஸ்வரன் எம்.பி உறுதி..!

Maash