பிரதான செய்திகள்

முருங்கன் பிரதேச வைத்தியசாலையில் இராணுவ வீரர்கள் இரத்த தானம் வழங்கி வைப்பு

 இராணுவத்தின் 542வது படைப்பிரிவின் ஏற்பாட்டில், மன்னார் – முருங்கன் பிரதேச வைத்தியசாலையில் இரத்த தானம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த இரத்த தான நிகழ்வு மன்னார் வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக, படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரியின் தலைமையில் நேற்று காலை நடைபெற்றது.

இதில், இராணுவத்தின் 542வது படைப்பிரிவின் கீழ் உள்ள மாந்தை மற்றும் உயிலங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 151 இராணுவ வீரர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்துள்ளனர்.

இந்த இரத்த தான நிகழ்வில் முருங்கன் பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் மற்றும் இராணுவத்தின் 542வது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கான டீல்களுக்கு இணங்காது-சஜித்

wpengine

விக்னேஸ்வரனின் “எழுக தமிழ்” எதிர்காலத்தில் தமிழ் ,முஸ்லிம் அழுகைக்குரலாக பரிணமிக்கக் கூடாது -ஏ.எச்.எம். அஸ்வர்

wpengine

2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட இறுதி நிலை அறிக்கையை சபையில் சமர்ப்பிக்க தீர்மானம்!

Editor