பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முருங்கன் பகுதியில் தொற்று நீக்கிய பின்னர் மன்னாருக்குல் அனுமதி

நாடளாவிய ரீதியில் பரவி வரும் கொரோனா தொற்று பரவலின் காரணமாக வெளி மாவட்டத்தில் இருந்து மன்னார் மாவட்டத்துக்குள் வியாபார நோக்கத்துடன் உள்நுழையும் வியாபாரிகள் ஒரு மாதகால எல்லைக்குள் பெறப்பட்ட பீ. சி.ஆர் பரிசோதனை அறிக்கையுடன் வரும் போது மாத்திரமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் வியாபார வாகனங்கள் அனைத்தும் மன்னார் முருங்கன் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பகுதியில் தொற்று நீக்கிய பின்னர் மன்னார் மாவட்டத்துக்குள் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டும் என தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.


கொரோனா தொற்று பரவல் தொடர்பான அவசர மீளாய்வு கூட்டமானது மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் காலை இடம்பெற்றிருந்தது.


குறித்த கூட்டமானது வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றுள்ளது.


குறித்த கூட்டத்திலேயே மேற்படி தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
அதேநேரத்தில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டுள்ள மாவட்டங்களுக்கிடையிலான பொது போக்குவரத்து சேவை தொடர்பாகவும் அவற்றை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாகவும் அத்தியாவசிய பொருட்களுக்கான தேவைகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.


அத்துடன் திருமண நிகழ்வுகள், வைபவங்கள் போன்ற மக்கள் ஒன்று கூடும் இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பாகவும் உரையாடப்பட்டது.


மதுபான சாலைகள் மற்றும் அதிஸ்ட லாப சீட்டுக்கள் விற்பனை செய்யும் இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பாகவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.


அதேநேரத்தில் இதுவரையான காலப்பகுதியில் மன்னார் மாவட்டம் முழுவதும் 2405 பி.சீ.ஆர் பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதில் 12 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


அவர்களில் 10 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பட்டதாரிகளை ஆசிரிய சேவையில் இணைத்துக்கொள்வதற்கான போட்டி பரீட்சை விரைவில்!

Editor

தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு!

Editor

சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட பொருட்கள் பழுதடைந்து

wpengine