செய்திகள்பிரதான செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உட்பட மூவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்..!!!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட 3 சந்தேகநபர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மஹர நீதவான் காஞ்சனா சில்வா முன்னிலையில் இன்று(14) ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

பிரசன்ன ரணவீர சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கையை ஆராய்வதற்கு மறுப்பு தெரிவித்து நீதவான் விளக்கமறியல் உத்தரவை நீடித்துள்ளார்.

கிரிபத்கொடை பகுதியில் அரசாங்கத்திற்கு உரித்தான காணியொன்றை போலி உறுதிப்பத்திரம் தயாரித்து விற்பனை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மூவரும் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

பிரசன்ன ரணவீரவினால் முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கையை எதிர்வரும் 14ஆம் திகதி பரிசீலிப்பதற்கு நீதவான் திகதியிட்டுள்ளார்.

Related posts

அதிகரித்துள்ள கொலைக்கலாசாரம் காரணமாக மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Maash

10 அதிகாரிகளை மாத்திரம் அழைத்து செல்லவுள்ள ஜனாதிபதி கோத்தா

wpengine

வங்கிகளுக்கு விசேட விடுமுறை!

Editor