பிரதான செய்திகள்

முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டி

வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனை அவரது இல்லத்தில் நேற்றுமுன்தினம் சந்தித்த சுரேன் ராகவன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.


சுமந்திரனின் நண்பரான சுரேன் ராகவன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார் என்றும், நேற்றுமுன்தினம் சுமந்திரனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது என்றும் தெரியவருகின்றது.


யாழ். மாவட்டத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஒதுக்கிய 7 ஆசனங்களில் ஏற்கனவே 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் என்றும், எஞ்சிய 3 ஆசனங்களில் ஒருவர் பெண் உறுப்பினர் எனில் ஏனைய இரு ஆசனங்களுக்கும் நீண்டகால உறுப்பினர்கள் அதிகம் பேர் உள்ளதால் போட்டி நிலமை உள்ளது என்றும் சுமந்திரன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.


அதனால் சுரேன் ராகவனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக் கிடைக்காது என்று தெரியவருகின்றது.

Related posts

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் றிஷாட் மீது காழ்ப்புணர்ச்சியுடன் – முபாறக் அப்துல் மஜீத்

wpengine

மஹிந்த விடயத்தில் அரசாங்கத்துக்கு 72 மணித்தியால அவகாசம்- பிக்குகள் ஆவேசம்

wpengine

மருந்து தட்டுப்பாட்டை நீக்க புதிய வேலைத்திட்டம் ஆரம்பம்!

Editor