பிரதான செய்திகள்

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ வைத்தியசாலையில்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீரென ஏற்பட்ட முதுகுவலி காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச சொத்துக்களை தனது தனிப்பட்ட தேவைக்காக தவறாக பயன்படுத்தியமை, கம நெகும திட்டத்தின் நிதியை மோசடி செய்தமை, உள்நாட்டு பயணங்களின் விமானச் சேவைக்காக 150 மில்லியன் ரூபாவை மோசடி செய்தமை தொடர்பிலான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பஸில் ராஜபக்ஷவை எதிர்வரும் ஆகஸ்ம் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

“காணாமல்போனோர் தொடர்பாக ஆராயும் காரியாலயம் ஆபத்து என்கிறார்” மஹிந்த

wpengine

Colombo D.S. Senayake College celeberated Internationl Mother Language Day – chief guest state minster education Ratha krishnan

wpengine

தமிழக முதல்வருக்கு வடக்கு முதல்வர் வாழ்த்து

wpengine