செய்திகள்பிரதான செய்திகள்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவிற்கு கடுமையான நிபந்தனைகளின் கீழ் பிணை..!!!

தங்க முலாம் பூசப்பட்ட T56 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவிற்கு கடுமையான நிபந்தனைகளின் கீழ் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

துமிந்த திசாநாயக்க சமர்ப்பித்த பிணை மனுவை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த உத்தரவை பிறப்பித்தார்.

சந்தேகநபரை 250,000 ரூபா ரொக்கப்பிணை மற்றும் தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான 2 சரீரப்பிணைகளில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

வெளிநாட்டு பயணத்தடை விதித்த நீதிபதி, சந்தேகநபரின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

Related posts

பெற்றோல் விவகாரம்! கடமைக்கு திரும்பாத ஊழியர்கள் தாமாகவே விலகியதாக கருதப்படுவர்;ஜனாதிபதி

wpengine

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி இடம்பெறவில்லை

wpengine

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம்.

wpengine