முன்னால் பிரதி அமைச்சர் வெற்றிக்காக பலர் இணைவு

நடை பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலினை முன்னிட்டு திருகோணமலையில் தேர்தல் கள நிலவரம் சூடு பிடித்து வருவதுடன் கட்சி மாறும் படலம் தொடங்கியுள்ள நிலையில் மாற்று கட்சியினரை சேர்ந்த பலர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார்கள்.


குறித்த நிகழ்வு தம்பலகாமம் சிராஜ் நகர் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான அப்துல்லா மஃறூப் முன்னிலையில் பலர் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சஜித் பிரேமதாச அணியினை பலப்படுத்தும் நோக்கில் கட்சி மாற்றங்கள் இடம் பெற்று வருவதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் , தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர்களான எச்.தாலிப் அலி ஹாஜியார்,ஆர்.எம்.றெஜீன்,கிண்ணியா நகர சபை உ தவிசாளர் ஐயூப் நளீம் சப்ரீன்,உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள் எனபலரும் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares