உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

முன்னால் ஜனாதிபதி முர்ஷிக்கு மரண தண்டனை இரத்து

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மொர்சிக்கு, சிறை உடைப்பு தொடர்பான வழக்கில் குற்றவியல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை, அந்நாட்டு தலைமை நீதிமன்றம் இரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

மத்திய தரைக்கடல் நாடுகளில் ஒன்றான எகிப்தில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனாதிபதியாக இருந்த ஹோஸ்னி முபாரக் தலைமையிலான அரசுக்கு எதிராக, 2012ல் பயங்கர கலவரம் வெடித்தது. முகமது மொர்சி (Mohamed Morsi) தலைமையிலான முஸ்லிம் சகோதரத்துவ கட்சியினர், பொதுமக்கள் ஆதரவுடன் நடத்திய போராட்டத்தில், ஆட்சியிலிருந்து முபாரக் கவிழ்க்கப்பட்டார், மொர்சி ஜனாதிபதியானார்.

அதற்குப் பின் நடைபெற்ற, மொர்சி அரசுக்கு எதிரான போராட்டத்தில், 2013ல், ஆட்சியை இழந்த மொர்சி மற்றும் அவரது அரசின் அமைச்சர்கள் சிறையில் தள்ளப்பட்டு உள்ளனர். ஏராளமான குற்றச்சாட்டுகளின் படி, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள மொர்சி மீது, 2012ல், சிறைகளை உடைத்து, கைதிகளை விடுவித்த வழக்கில், மொர்சி மற்றும் அவரின் ஆதரவாளர்கள், 130 பேருக்கும் மரண தண்டனை விதித்து, குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து எகிப்தின் தலைமை நீதிமன்றத்தில் மொர்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிமன்றம் மொர்சிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் இவ்வழக்கின் விசாரணையை மீண்டும் முதலில் இருந்து தொடங்கவும் உத்தரவிட்டுள்ளது.

Related posts

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் மேலும் வர்த்தகமானி

wpengine

கஞ்சா கணவனை மீட்க லஞ்சம் வழங்கிய மனைவி கைது

wpengine

மின்சாரம் தாக்கி இருவர் பலி; மட்டக்களப்பில் சம்பவம்!

Editor