பிரதான செய்திகள்

முன்னால் அமைச்சர் ராஜபஷ்சவுக்கு !உலமா சபை கண்டனம்

 (அஸ்ரப் ஏ சமத்)

முன்னாள் அமைச்சா் விஜயதாச ராஜபக்சவுக்க அண்மையில் தெரிவித்த கருத்து சம்பந்தமாக  அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை கடிதமொன்றை அனுப்பியுள்ளது

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் செயலாளா்   முன்னாள் நீதியமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி விஜயதாச ராஜபக்சவுக்கு முகவரியிட்டு தமது கண்டனத்தை தெரிவித்து கடிதமொன்றை அனுப்பியு்ளளது.

அக் கடிதத்தின் பிரதியை  ஊடகங்களுக்கும் அனுப்பியுள்ளது. 


கடந்த 2020.02.28ஆம் திகதி  முன்னாள் நீதி அமைச்சா் காலாநிதி விஜயதாச ராசபக்ச அவா்கள் உயிா்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக ஜனாதிபதியினால்  நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆனணைக்குழு  முன் தோன்றி அவா்  சாட்சியமளித்திருந்தாா்    அதில்  ”  அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஒரு பதியப்படாத ஒரு அமைப்பு எனவும்  , அதனை தடைசெய்தல் வேண்டும்.

இவ் அமைப்பே முஸ்லிம் நாடு கேட்பதற்கும்  இலங்கையில் துனைபோகின்றது. என அவா் அங்கு கூறியதாக ஊடகங்களில் வெளிவந்திருந்தது.


அவாின் இக் கூற்று  உண்மைக்குப் புறம்பானது.  அகில இலங்கை ஜம்மியத்துல் உலாமா அமைப்பு என்பது முஸ்லிம்களின் ஆண்மிக விடயத்தில் கையாழும் ஒர் அமைப்பாகும்.  இவ் அமைப்பு  பாராளுமன்றத்தில் உள்ள இன்கோப்பிரேட் சட்டத்தின் கீழ்  இல 51-2000 -1924ல் கூட்டினைக்கப்பட்டதும் இந்த நாட்டின் அதி உயா் பீடமான இலங்கைப்  பராளுமன்றத்தினால் அங்கிகரிக்ப்பட்ட ஒரு முதிா்ந்த அமைப்பே அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பாகும். .  இதனை அறியாது  கருத்துத் தெரிவித்த  முன்னாள்  நீதியமைச்சா் நீதித்துறையில் கலாநிதி பெற்றவா் அதுவும் ஜனாதிபதி சட்டத்தரனியுமான விஜயதாச ராஜப்கச  பற்றி நினைக்கும் போது  எமது அமைப்பு கவலை அடைகின்றது. 


எமது அமைப்பு ஒருபோதும் இந்த நாட்டை துண்டாடவோ முஸ்லிம் தனிநாடோ. கேட்டதும் இல்லை.  இந்த நாட்டில் வாழும் ஏனைய சமுகங்களினது ஒரு சமாதானப் பாலமாகவே இவ் அமைப்பு இயங்கி வந்துள்ளது.   இந் நாட்டில் அங்காங்கே நடைபெறும் அனா்ந்தங்கள், பயங்கரவாத தாக்குதல்களில் சகல இனங்களையும் ஒன்றினைத்து ஜக்கியமாகவும் சமாதான விரும்பிகளாகவே  செயற்பட்டு வந்துள்ளது  அதனையே எதிா்காலத்திலும் செயற்பாடும்  ஒரு அமைப்பாகும்.  எமது அமைப்பு இந்த நாட்டின் நன்மைகளுக்கே இனைந்து செயற்பட்டதொரு அமைப்பாகும். ஆகவே ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராசபக்ச உண்மைக்கு புறம்பான இவ் ஆன்மீக அமைப்பு பற்றி தெரிவித்த கருத்தினை அவா்  திருத்திக் கொண்டு சரியான தகவல்களை அவா் ஊடகங்களுக்கும் மாற்று சமுகங்களுக்கும்  அறிவித்தல் வேண்டும் என  அந்த அமைப்பின் செயலாளா் அஸ் சேக் எம். ஜே.எம் றியால் மௌலவி ஒப்பமிட்டு கடிதமொன்றை  அனுப்பியுள்ளதாக ஜம்மியத்துல் உலாமா ஊடகங்களுக்கும் அறிவித்துள்ளது.

Related posts

சமுர்த்தி பயனாளிகளுக்கு சந்தோஷம்! சுற்றறிக்கை இரத்து!

wpengine

பெண்கள் வாட்ஸ்அப் தொல்லையிலிருந்து தப்பிக்க 5 டிப்ஸ்!

wpengine

பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு சப்ரி திடீர் விஜயம்

wpengine