பிரதான செய்திகள்

முதுகெழும்புள்ள ஒருவருக்கு ஆணையாளர் பதவி கொடுக்க வேண்டும்

அடுத்த ஜனவரி மாதத்தில் தேர்தலை நடத்த முடியாது போனால் தேர்தல் ஆணையாளர் பதவி விலக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சட்டத்தரணிகள் சங்க ஒன்றியம் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளது.

அடுத்தவருடம் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தலை நடத்த முடியாது போனால் பதவி விலகுவதாக தேர்தல் ஆணையாளர் கூறியுள்ளார்.

அவரால் ஜனவரி மாதத்தில் தேர்தலை நடத்த முடியாவிடில் அந்த பதவியில் இருந்து விலகி, தேர்தலை நடத்தக்கூடிய முதுகெழும்புள்ள அதிகாரியொருவருக்கு அந்த பதவிலைய வழங்க வேண்டும் என சங்கத்தின் இணைப்பாளர், சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

மக்களின் ஜனநாயாக உரிமை பரிக்கப்பட்டுள்ளநிலையில், மக்கள் உரிமைக்காக பாடுபடுகின்ற ஒருவராக இருந்தால் தேர்தல் ஆணையாளர் நீதிமன்ற நடவடிக்கையொன்றை மேற்கொள்ள வேண்டும் என மனோஜ் கமகே கோரியுள்ளார்.

Related posts

ஜயரத்ன ஹேரத் MPஇன் வாகனம் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம்!

Editor

கிழக்கு மாகாண ஆளுநரை பதவி நீக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

Editor

கண்ணியாஸ்திரிகள்’ அணியும் ஆடை என்பது முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயாவுக்கு நிகரானது

wpengine