மன்னார் மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு 100 வயதை கடந்த மாந்தைமேற்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சாளம்பன் கிராமத்தை சேர்ந்த மனுவேல் சந்தான் என்ற முதியவர் கடந்த (20ஆம் திகதி) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் அவர்களினால் கௌரவிக்கப்பட்டார்.
குறித்த முதியவருக்கு நான்கு மகள், இரண்டு மகன், பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள் என 49 உறுப்பினர்களைக் கொண்ட குடும்ப அங்கத்தவர்கள் உள்ளனர்.
இதன்போது அரசாங்க அதிபர் உட்பட நிகழ்வில் கலந்து கொண்ட மாவட்ட முதியோர் உரிமைகள் மேம்பாட்டு மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்கள் முதியவரிடம் ஆசி பெற்றனர்.
மேலும் முதியவருக்கு பிரகாஷ் செல்வராஜா (கனடா) என்பவர் ஐம்பதாயிரம் ரூபா கொடுப்பனவை அன்பளிப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


