Breaking
Sun. Oct 6th, 2024

பா.ஜ.க. எம்.பி. விட்டால் ரடாடியா, முதியவர் ஒருவரை காலால் எட்டி உதைக்கும் கொடுமையான காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

குஜராத் மாநிலம் போர்பந்தர் தொகுதி பா.ஜ.க. எம்.பி.யாக இருப்பவர் விட்டால் ரடாடியா. இவர், மதம் தொடர்பான நிக‌ழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது, கூட்டத்தில் அமர்ந்திருந்த முதியவர் ஒருவரை நோக்கி வேகமாக செல்லும் விட்டால் ரடாடியா, அந்த முதியவரை காலால் எட்டி எட்டி உதைத்துள்ளார்.

அந்த கொடுமையான காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவத்திற்கு, பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்த சம்பவம் எப்போது, எங்கே‌ நிகழ்ந்தது என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

கடந்த 2012-ம் ஆண்டு, சுங்கச்சாவடியில் பணம் கேட்டவரை துப்பாக்கி முனையில் மிரட்டியவரும் இதே ராடாடியா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க. எம்.பி. ஒரு முதியவரை காலால் எட்டி உதைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருவதால், அது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *