செய்திகள்பிரதான செய்திகள்

முச்சக்கர வண்டி மற்றும் எரிபொருள் பௌசர் விபத்தில் வைத்தியர் மரணம். – திருகோணமலையில் சம்பவம்.

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தங்கநகர் பகுதியில் நேற்று (17) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் நிரப்பிக் கொண்டு சென்ற பவுசர் வாகனமானது, முச்சக்கர வண்டியுடன் மோதுண்டதில் முச்சக்கர வண்டியில் பயணித்த 59 வயதுடைய வைத்தியர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

அத்தோடு முச்சக்கர வண்டி செலுத்திச் சென்ற நபர் படுகாயம் அடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்த வைத்தியரின் சடலம் சேருநுவர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருப்பது கட்டாயம்!!!! – பிரதமர் ஹரிணி அமரசூரிய

Maash

சுடர் ஒளிப்பத்திரிகையில் வெளிவந்த செய்திக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை – அமீர் அலி

wpengine

தமிழக தேர்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு! என்ன காரணம்?

wpengine