பிரதான செய்திகள்

முசலி முஸ்லிம் விளையாட்டு கழகங்களை ஊக்குவிக்காத பிரதேச செயலகத்தின் விளையாட்டு உத்தியோகத்தர்! வீரர்கள் கண்டனம்

(அஸ்லம்)

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகத்தில் பதிவு செய்த முஸ்லிம் விளையாட்டு கழக வீரர்களை பல வருடகாலமாக ஊக்குவிக்காமல் பக்கசார்பாகவும்,சுயநலத்துடன் முசலி பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் செயற்பட்டுவருவதாக முசலி விளையாட்டு கழக சம்மேளனம் குற்றம்சாட்டி உள்ளது.

மேலும் தெரிவிக்கையில்;

முசலி பிரதேசத்தில் முஸ்லிம் விளையாட்டு வீரர்கள் பலர் இருந்தாலும் பிரதேச செயலகத்தில் விளையாட்டு உத்தியோகத்தராக கடமையாற்றும் அதிகாரி முஸ்லிம் விளையாட்டு கழங்களுக்கு தகவல்களை கொடுப்பதில்லை என்றும்,முசலி  பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட சுமார் 28க்கும் மேற்பட்ட விளையாட்டு கழங்கள் இருந்தும் அவர்களை சந்தித்து இதுவரைக்கும் ஆரோக்கியமான கருத்துகளையும்,நல்ல ஆலோசனைகளையும் வழங்குவதில்லை என்றும் வீரர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

அது மட்டும் அல்லாமல் பிரதேச மட்ட கழகங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றால் அதனை கூட கிருஸ்தவர்கள் வாழும் அரிப்பு,சவேரியார்புரம்,கொக்குபடையான் போன்ற இடங்களை தெரிவு செய்து விளையாட்டுகளை நடாத்தி அந்த கிராமங்களை அபிவிருத்தி செய்கின்றார்கள் என்றும் விசனம் தெரிவிக்கின்றார்.

இது போல கடந்த முறை அரிப்பு கிராமத்தில் இடம்பெற்ற பிரதேச மட்ட விளையாட்டு போட்டிகளில் முஸ்லிம் கிராமங்களில் உள்ள எந்த கழகத்திற்கும் தகவல்களை கொடுக்காமல் போட்டிகளை நடாத்தி உள்ளார்கள். இதன் காரணமாக முசலியில் உள்ள பல வீரர்களின் விளையாட்டு திறன்கள் மழுங்கடிக்கப்படுகின்றன இது தொடர்பில் முசலி பிரதேசத்தில் உள்ள மூத்த விளையாட்டு வீரர்கள்,அரசியல்வாதிகள் கவனம் செலுத்துமாறு பிரதேச விளையாட்டு கழக சம்மேளனம் வேண்டுகோள் விடுக்கின்றது.

 

Related posts

மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியில் மாணவர் பாராளுமன்றத் தேர்தல்

wpengine

சிறுபான்மைச் சமூகங்களை எதிரிகளாகக் காட்டி, ராஜபக்ஷக்கள் வெற்றிபெற திட்டம்

wpengine

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் பேனை கூத்திய இனவாதிகள் அமைச்சர் றிசாட்

wpengine