முசலி பிரதேச சபையின் புதிய உறுப்பினராக எஸ்.அப்துர் ரஹ்மான் நியமனம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சியின் மர்ஹ்கும் (மரணித்த) முன்னால் பிரதேச சபை உறுப்பினர் பாயிஸ் என்பவரின் உறுப்புரிமை வெற்றிடத்துக்கு முசலி பிரதேச சபையின் முன்னால் உறுப்பினர் புதுவெளியைச் சேர்ந்த S.அப்துர் ரஹ்மான் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் முன்னால், பிரபல வர்த்தகரும் மற்றும் ஆசிரியருமாவார். இவரின் கடந்தகால சேவையினை கருத்திற் கொண்டு இவ்வுறுப்புரிமை வழங்கப்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேச சபைக்குரிய உறுப்புரிமையை உறுதிப்படுத்தும் கடிதமானது நேற்று (03/082022) புதன் கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னால் அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனால் கொழும்பிலுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சித் தலைமையகத்தில்வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares