பிரதான செய்திகள்

முசலி பிரதேச கலை,கலாச்சார ,இலக்கிய விழா

(எஸ்.எச்.எம்.வாஜித்)

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசத்திற்கான கலை,கலாச்சார மற்றும் இலக்கிய விழா முசலி பிரதேச செயலாளர் செல்லத்துறை கேதீஸ்வரன் தலைமையில் இன்று மதியம் 2.30மணியலவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் கலந்துகொண்டர்.

அத்துடன் முசலி  பிரதேசத்தில் உள்ள எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்,கவிஞ்ர்கள் மற்றும் இலக்கியவாதிகள் கௌரவிக்கப்பட்டு,அவர்களுக்கான நினைவு சின்னங்கள் அத்துடன் முசலி பிரதேசத்திற்கான நித்திலம் புத்தகத்தின் இரண்டாம் கட்ட புத்தகமும் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் தொடர்ந்து தெரிவிக்கையில் ;

முசலி பிரதேசம் யுத்தத்தினால் அதிகமாக பாதிக்கப்பட்ட பிரதேசமாக இருந்து வருகின்ற போதும் கடந்த காலத்தில் எமது பிரதேச இளைளுர்கள், யுவதிகள் விளையாட்டு துறை,இன்னும் சில துறைகளில் அதிக ஆர்வத்தை காட்டுகின்ற போதும்,கலை,கலாச்சார மற்றும் இலக்கிய விடயங்களில் அதிக ஆர்வங்களை ஏற்படுத்தி கொள்வதில்லை என்றும் எதிர்காலங்களில் இது போன்ற இன்னும் பல நிகழ்ச்சிகளில் அதிக அக்கரை செலுத்த வேண்டும் என எதிர்பார்கின்றேன். என தெரிவித்தார்.
இன் நிகழ்வில் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கிராம அதிகாரிகள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முசலி பிரதேச சமூக மட்ட அமைப்புகளின் அகத்தவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Related posts

முல்லைத்தீவில் கோழி இறைச்சி அதிக விலையில் விற்பனை; பொதுமக்கள் விசனம்!

Editor

தனிநபர் முற்பண வருமான வரி பாரிய அளவில் அதிகரிப்பு!

Editor

அரசுக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

wpengine