பிரதான செய்திகள்

முசலி பிரதேசத்தில் சந்தோச கிராமம்’ எனும் வேலைத்திட்டம்

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ‘சந்தோச கிராமம்’ எனும் வேலைத்திட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.


முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் பொது சுகாதார வைத்திய அதிகாரி வி.டிலக்சன் தலைமையில் முசலி பிரதேச மேற்பார்வை குடும்பநல உத்தியோகத்தர் ச.பேபிமலர் இன் பங்கு பற்றுதலுடன் ஹீனைஸ் நகர் கிராமத்தில் வைபவரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இதன் தலைவர் ஏ.ஜே.எம்.முஸம்மில் , செயலாளர் எம்.ஏ.சி.றைஹானா உட்பட அங்கத்தவர்களான றிஸ்மியா, றிப்கான், சமீம், அஹீதார், நஸீம், மைசூக், அஸ்மின், முர்சித் ஆகியோருடன் முள்ளிக்குளம் பொது சுகாதார வைத்திய அதிகாரி வி.டிலக்சன் மற்றும் முசலி பிரதேச மேற்பார்வை குடும்பநல உத்தியோகத்தர் ச.பேபிமலர் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு! மேலும் பல நன்மைகள் அமைச்சர் றிஷாட்

wpengine

அடுத்த வருடத்தின் முதற் பகுதியிலேயே தேர்தலை நடாத்த முடியும் – பைஸர் முஸ்தபா

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை குழு

wpengine