பிரதான செய்திகள்

மீள்குடியேற்ற நடவடிக்கை! வெளிமாவட்டத்தில் உள்ளோர் விண்ணப்பிக்கலாம்

(ஊடகப்பிரிவு)

நீண்டகால உள்ளக இடமபெயர்ந்தவர்களை வட மாகாணத்தில் மீளக்குடியமர்த்தும் துரித வேலைத்திட்டத்தை மீள்குடியேற்ற செயலணி முன்னெடுத்து வருகின்றது.

பூர்வீக இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு மீள்குடியேற எதிர்பாரத்துக் கொண்டிருப்பவர்கள் மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழான இந்த செயலணிக்கு உடன் விண்ணப்பிக்குமாறு மீள்குடியேற்ற செயலணியின் பணிப்பாளர் பொறியலாளர் யாசீன் தெரிவித்தார்.

வட மாகாணத்தில் முன்னர் வாழ்ந்து யுத்த நெருக்கடிகளாலும், யத்தப்பீதியினாலும் வெளியேறிய, வெளியேற்றப்பட்டு தென்னிலங்கையில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் அகதி மக்கள் இந்த செயலணிக்கு தமது விண்ணப்பங்களை அனுப்பி மீண்டும் தமது தாயகத்தில் மீள்குடியேறி வாழ்வதற்கு இந்த செயலணி உதவிகளை நல்க நடவடிக்கை எடுத்துள்ளது.

விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பங்களை கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், அல்லது www.taskforcepidp.lk or www.resettlementmin.gov.lk என்ற இணைய முகவரி ஊடாகவும் பெற்று 2017.10.16 ஆம் திகதிக்கு முன்னர் நீங்கள் வசிக்கும் பிரதேசத்திலுள்ள கிராம உத்தியோகத்தரிடம் ஒப்படைக்குமாறு பணிப்பாளர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

 

மேலதிக தகவல்களுக்கு

திட்டப்பணிப்பாளர்,
‘நீணடகால உள்ளக இடம்பெயர்ந்தவர்களை வட மாகாணத்தில் மீள் குடியேற்றுவதற்கான செயலணி’
356B, 1ம் மாடி, காலி வீதி,

கொழும்பு – 03

என்ற முகவரியுடன் அல்லது
தொலைபேசி இலக்கம் : 011-2574567
உடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 

Related posts

சுடர் ஒளிப்பத்திரிகையில் வெளிவந்த செய்திக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை – அமீர் அலி

wpengine

தேசிய கண் வைத்தியசாலையின் அனைத்து அறுவை சிகிச்சை அறையிலும் கிருமி; சிகிச்சை இடைநிறுத்தம்!

Editor

முல்லைத்தீவு நாயாருவில் இருந்து கடற்கரையில் கடுமையான மாற்றம்

wpengine