மீண்டும் வந்துவிட்டு சென்ற மன்னார் அரசாங்க அதிபர் சி.ஏ.மோகனறாஸ்

மன்னார் மாவட்ட செயலகத்தில் கடந்த பல வருடகாலமாக அரசாங்க அதிபராக கடமையாற்றிய சி.ஏ.மோகனறாஸ் இன்று முழுமையாக மன்னார் மாவட்ட செயலகத்தை விட்டு சென்றுவிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் சேவையிலிருந்து இழைப்பாறிய சி.ஏ.மோகனறாஸ் மீண்டும் மூன்று மாதங்களுக்கு அரசியல் அழுத்தம் காரணமாக மீண்டும் நியமிக்கப்பட்டார்.


கடந்த காலங்களில் இவர் மன்னாரில் உள்ள பல அரச உத்தியோகத்தர்களுடன் காரணமில்லாமல் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இன்னும் சரியான காரணங்கள் இல்லாமல் சில உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றங்களை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


அத்துடன் மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற ஒரு பிரதேச செயலாளர் பிரதேச செயலாளர்களுக்கான தடை தாண்டல் பரீட்சையில் சித்திபெறாமல் இன்னும் பிரதேச செயலாளராக கடமையாற்றி வருகின்றார்.

இது தொடர்பில் ஜனாதிபதி,பிரதமர்,வன்னி மாவட்ட அரசியல்வாதிகள் இன்னும் சமூக சிந்தனையாளர்கள் கவனம் செலுத்த வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றார்.


குறிப்பு தடை தாண்டல் பரீட்சையில் சித்தி பெறாத பிரதேச செயலாளர் பற்றிய முழுமையான செய்திகளை விரைவில் எதிர்பாக்க முடியும்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares