மீண்டும் மன்னார் வைத்தியசாலை வைத்தியரின் அசமந்த போக்கு! பெண் பரிசோதகர் பலி

மன்னார் பொது வைத்தியசாலையில் பணி புரியும் சத்திரசிகிச்சை நிபுணரின் அசமந்தப்போக்கால் பெண் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தலைமன்னார் வைத்தியசாலையில் பணிபுரியும் ரி.றோகினி என்ற இரு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மன்னார் பொது வைத்தியசாலையில் கல்லடைசலை அகற்ற சிகிச்சைக்கு சென்ற தலைமன்னார் வைத்தியசாலை பெண் பரிசோதகர் மரணமடைந்ததால் வைத்தியசாலையில் கூடிய சக ஊழியர்கள் இன்று பகல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் தமது கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

இது தொடர்பாக தெரியவருவது.

மன்னார் பொது வைத்தியசாலையில் பணியாற்றி இடம்மாற்றம் பெற்று தலைமன்னார் வைத்தியசாலையில் பணியாற்றிவரும் பெண் பரிசோதகர் கல்லடைசல் காரணமாக சிகிச்சை பெற மன்னார் பொது வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.625.157.560.350.160.300.053.800.279.160.70

இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கு சத்திரசிகிச்சை கூடத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சத்திரசிகிச்சைக்காக மயக்கமடைய செய்து பின் ஊசி மூலமான கமரா செலுத்தி கல்லடைசல் தொடர்பான சிகிச்சை ஆரம்பிக்கப்பட்ட போது, முறையற்ற சிகிச்சையால் காலையில் அவர் இறந்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.625.157.560.350.160.300.053.800.279.160.70 (1)

ஆனால் பகல் 1:30 மணிக்கே அவர் இறந்ததாக வைத்தியர்கள் தெரிவிப்பதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ள இறந்தவரின் உறவினர்கள் மற்றும் சக ஊழியர்கள், குறித்த வைத்தியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமது எதிர்ப்பினை தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. இதனையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.625.157.560.350.160.300.053.800.279.160.70 (3)

இந்நிலையில் அங்கு வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம் மற்றும் வட மாகாணசபை உறுப்பினர் ஞானசீலன் குணசீலன் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடி விடயங்கள் தொடர்பாக கேட்டறிந்தனர்.

இதனையடுத்து மன்னார் மாவட்ட பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் ராஜினி சிசில் மற்றும் மன்னார் பொது வைத்தியசாலை அத்தியட்சகர் ஈற்றன் பீரிஸ் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடி குறித்த வைத்தியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.625.157.560.350.160.300.053.800.279.160.70 (4)

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares