பிரதான செய்திகள்

மீண்டும் இனவாதத்தை தூண்ட மஹிந்த முயற்சி

நாட்டில் இனவாத ரீதியான மோதல்களை ஏற்படுத்தும் செயற்பாட்டில் ராஜபக்ஷர்கள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 50 நாட்களாக பிரதமராக மஹிந்த செயற்பட்டிருக்கவில்லை என்றால், நாடு பல பிளவுகளாக உடைந்திருக்கும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இனவாதம் மற்றும் மத வாதத்திற்கு எதிரானவராக கருதப்படும் பசில், ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இனவாத ரீதியாக பேசியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக செயற்பட்ட காலப்பகுதியில் நாட்டு மக்களுக்கு மிகவும் நன்மையான காலப்பகுதியாக காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

50 நாட்கள் சட்டவிரோத சூழ்ச்சி தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் ராஜபக்சர்கள் இனவாதத்தை தூண்டிவிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மஹிந்த பிரதமர் பதவியை நாடாளுமன்றமோ நீதிமன்றங்களோ ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்திருந்தார்.

இதன்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மஹிந்த, 103 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆட்டிப்படைக்கும் ரிமோட் தமிழ் தேசிய கட்சியிடம் உள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தரச் சான்றிதழ் வழங்காமையால் துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் 20 இலட்சம் இந்திய முட்டைகள்!

Editor

மானிய விலையில் பொது மக்களுக்கு பொதி வழங்க அரசாங்கம் நடவடிக்கை

wpengine

ரூபா வீழ்ச்சி! கடும் பொருளாதார நெருக்கடி

wpengine