பிரதான செய்திகள்

மிஸ்டர் கிளீன் என அழைக்கப்பட்ட ரணில் மிஸ்டர் டேர்ட்டியாகி விட்டார்-மஹிந்தானந்த அலுத்கமகே

மிஸ்டர் கிளீன் என அழைக்கப்பட்ட  ரணில் மிஸ்டர் டேர்ட்டியாகிவிட்டதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே குறிப்பிட்டார்.கண்டி மாவட்டம் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளிட்டவரே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அங்கு அவர் தொடந்து கருத்து வெளியிடுகையில்..

 

தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2002ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை நாட்டையே  புலிகளுக்கு தாரைவார்க்க  செயற்பட்ட போதும் அதனை எல்லாம் பாரிய விடயமாக கருதாது அவர் ஊழல் மோசடி செய்யவில்லை என பலர் பெருமையாக கூறினார்கள்.அவ்வாறான ஐக்கிய தேசிய கட்சி காரர்கள்  ரணில் விக்ரமசிங்கவை  மிஸ்டர் கிளீன் எனவும் அழைத்தார்கள்.ஆனால்,இன்று ரணில் விக்ரமசிங்க அவரது ரோயல் கல்லூரி நண்பர் மூலம் மத்திய வங்கியில் கொள்ளையடித்து  மிஸ்டர் டேர்ட்டியாகிவிட்டார்.இப்போது அவர்களால் அவ்வாறு அழைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

 

மத்திய வங்கியில் பகல் கொள்ளை இடம்பெற்றுள்ளது.மத்திய வங்கி ஆளுனர் மஹேந்திரனின் மருமகன் அலோசியஸ் மத்திய வங்கியில் வட்டியில்லாத கடனை பெற்று மத்திய வங்கிக்கே வட்டிக்கு கடனாக வழங்கியுள்ளார்.இது ஜனாதிபதி விசாரனைக்குழுவின் விசாரணைகளில்

அம்பலமாகியுள்ளது.

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஊழல் செய்ததாக கூறி ஆட்சிக்கு வந்த மைத்திரியும் ரணிலும் ஊழல் நிறைந்த ஆட்சியையே செய்கின்றார்கள்.திருடர்களை பிடிப்பதாக மார்தட்டி வந்த இவ்வரசு,ஆட்சிக்கு வந்தது முதல் மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதை தவிர வேறு எதையும் செய்யவில்லை.இவர்கள் இவ்வாட்சியை கைப்பற்ற  ஊழல் ஒழிப்பே பிரதான கோசமாக இருந்தது.தற்போது அவ்வாறானதொரு ஆட்சியை அவர்களால் செய்ய முடியாமையை தாங்களாகவே உணர்ந்து ,அவர்கள் இவ்வாட்சியை கலைத்து வீடுகளில் அமர வேண்டும் என தெரிவித்தார்.

Related posts

விக்னேஸ்வரனின் “எழுக தமிழ்“ நல்லிணக்கத்திற்கு எதிரான-எம். ஏ.சுமந்திரன்

wpengine

தேசிய மீலாத் விழாவினை முன்னிட்டு நுவரெலியாவில் வறுமையான 100 குடும்பங்களுக்கு வீடுகள்

wpengine

வாகன இலக்க தகடுகளில்! வாவொலி சமிக்கை

wpengine