பிரதான செய்திகள்

மியன்மார் வான்வழி தாக்குதலில் 30 பேர் பலி, பலர் காயம்!

மியன்மாரில் சாஜைங் பகுதியில் இராணுவ ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இன்று மியன்மர் இராணுவம் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. 

இந்த தாக்குதலில் பொதுமக்களில் 30 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலுக்கு மியன்மர் இராணுவம் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. 

முன்னதாக, இராணுவ ஆட்சியை எதிர்க்கும் எதிர்ப்பாளர்கள் முடக்கப்படுவார்கள் என்று மியன்மர் இராணுவம் சமீபத்தில் தெரிவித்த நிலையில், இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

Related posts

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு

wpengine

12 இந்திய மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை

wpengine

சிறுபான்மை கட்சிகளை ஓரம் கட்டலாம் என்று நினைத்தால் நான் எதிர்ப்பேன்

wpengine